ராணிப்பேட்டை, ஜன. 28 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் “இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை பாதுகாப்பு” கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பால சுப்பிரமணி தலைமையில் ராணிப்பேட்டை யில் சனிக்கிழமை (ஜன. 28) நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதத்தை மிருகத்தனமாக திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மோடியும், ஆளுநரும் மாறி மாறி தமிழ் வளர்ச்சி என்று பேசி னாலும், நடைமுறையில் தமிழ் வளர்ச்சிக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பங்கு அளவு கூட தமிழ் மொழிக்கு ஒதுக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். மொழி பாதுகாப்பிற்கு தமிழ்நாடு எப்பொழுதும் முன்ணனியில் நிற்கும். தமிழ் மொழிக்காக அதிகளவில் உயிர் நீத்தவர்கள் போல் உலகில் வேறு எந்த மொழிக்காகவும் உயிர் நீத்தவர்கள் இல்லை. தமிழ் மொழி பாதுகாப்பில் முற்போக்காளர்கள் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றனர். தாய் மொழிதான் அவரவர் வளர்ச்சிக்கு உகந்தது. எனவே தாய் மொழியை, தமிழ் மொழியை பாதுகாப் போம். ஒன்றிய அரசின் மொழித் திணிப்பை ஒன்றுபட்டு முறியடிப்போம் என்றார். இதில் வேலூர் மாவட்டச் செயலாளர் சு.சுரேந்திரன், ராணிப்பேட்டை மாவட்டக் குழு உறுப்பினர்கள் த.ரஜினி, கோ.ரங்க நாயகி, மு.க.ஜீவா, ெஜகஜீவன்ராம், கோபால்ராஜ், எஸ்.எம்.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் எல்.ரஜினிகாந்த் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஆர். மணிகண்டன் நன்றி கூறினார்.