முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை,நவ.7- காய்ச்சல் கிருமி தொற்று அதி கரித்த வருவதால் சென்னையில் பொது மக்கள் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொணடுள்ளது. இதுகுறித்து அந்த துறையின் இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யுள்ளதாவது: சென்னையில் சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஃபுளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. இதைத்தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது. இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும். மற்றொருபுறம், டாக்டர்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவை யில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப் பட்ட நோயாளிகள் தங்களைத் தனிமை ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில், தீவிர பாதிப்பு உள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு கள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ப வர்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளி கள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிர் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறை தல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளோரை மருத்துவப் பரி சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஓசல்டாமிவிர் உள்ளிட்ட மருந்து களுடன் மருத்துவமனையில் அனு மதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம். மருத்துவத் துறையினர், சுகாதார களப் பணியாளா்கள் முகக்கவசம் அணி தல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக் கவசங்களை அணியலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை யிலிருந்து புரூனேக்கு நேரடி விமான சேவை
சென்னை,நவ.7- சென்னையிலிருந்து புரூனே நாட்டிற்கு செல்ல ராயல் புருனே ஏர்லைன்ஸ் நிறு வனம் சார்பில் நேரடி விமான சேவையைத் தொடங்கியது. நவ.5அன்று முதல் தொடங்கியுள்ள இந்த சேவையில் சென்னையிலிருந்து வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி என மூன்று தினங்க ளுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. நவ.5ஆம் தேதி புருனே நாட்டில் இருந்து இரவு 10.50 மணியளவில் புறப்பட்ட புரூனே ஏர்லைன்ஸின் A320 நியோ விமானம் முதன் முறையாக நவ.6 ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதனை வரவேற்கும் விதமாக விமானத்தின் இரு பக்கங்களிலும் நீரை பீச்சியடித்து வர வேற்பு அளிக்கப்பட்டது.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது
சென்னை, நவ. 7- தங்கம் விலை வியாழனன்று ஒரே நாளில் சவரனுக்கு அதிரடியாக ரூ.1,320 குறைந்து, ரூ.57,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ந்தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்தது. ஒரு சவரன் ரூ.58,840க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் புதனன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் படி, சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கு விற்பனை செய்ய ப்படுகிறது. கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வரு கிறது.
ஆண்டுக்கு 27ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை, நவ.7- சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்து வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன. தற்போது தினமும் சராசரியாக 65 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 19,640 நாய்கள் பிடிக்கப்பட்டு 14,885 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட நாய்கள் கணக்கெடுப்பில் சென்னை மாநகராட்சி பகுதியில் 1.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதிய மின்சார ரயில் சேவை
சென்னை, நவ.7- ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை புதனன்று (நவ.6)அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில், மாலை 6.10 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு மாலை 6.55 மணிக்கு வந்தடையும். இதேபோல், சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயில் 12 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.130
சென்னை, நவ. 7- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் புதனன்று ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ வெங்காயம், ஒரே நாளில் ரூ.40 உயர்ந்து, வியாழனன்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு மார்க் கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வரும் நிலையில், 500 டன் மட்டுமே வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெருக்களில் மாடுகளை திரியவிட்டால் நடவடிக்கை
சிதம்பரம், நவ 7- சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அண்ணாமலைநகர் காவல்துறை சார்பில் மாடு வளர்ப்போர் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை நகர் பேரூ ராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பால முருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் பங்கேற்று சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் எவ்வாறு விபத்து நடைபெறுகிறது. இதுவரை தெருவில் திரியும் மாடுகளால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள். காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் விரிவாக பேசினார். எனவே மாட்டின் உரிமை யாளர்கள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் மாடுகளை தெருவில் விடக்கூடாது என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கடலூர், நவ.7- கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல் நோயின் காரணமாக மருத்துவ மனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து சிபிஎம் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : கடலூர் மாவட்டத்தில் பருவ நிலை மாற்றத்தால் மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தும்பல் உள்ளிட்ட நோய்களினால் ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் மக்கள் சிகிச்சைக்காக அலைந்து கொண்டி ருக்கிறார்கள். கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். காய்ச்சலுக்கு சிறப்பு பிரிவுகளை உருவாக்கி தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு நடராஜர் கோவிலில் இரும்பு தடுப்புகளை அகற்றிய தீட்சிதர்கள்
சிதம்பரம், நவ 7- சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரம் அமைக்கும் பணிக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கு விசாரணை சிதம்பரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்தில் 15 நாட்களுக்கு தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் கொடிமரம் அமைக்கும் பணிகள் எதுவும் செய்யக் கூடாது என உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பணி எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்களுக்கு இடையூறாக இருந்தது. இது குறித்த செய்தி நவ 7 ஆம் தேதி தீக்கதிர் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதனையொட்டி தீட்சிதர்கள் அந்த தடுப்பை அகற்றினர்.
உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
கடலூர், நவ.7 - கடலூர் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு : கடலூர் மாவட்டம் முழுவதும் உரக்கடைகளில் உரம், யூரியா, டிஏபி , அடி உரம் உள்ளிட்ட உரங்கள் மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் சில கடைகளில் உரங்களை பதுக்கி வைத்து விலையை ஏற்றி விற்கும் நிலை உள்ளது. வேளாண்மை கூட்டுறவு சொசைட்டிகளில் தங்கு தடை இன்றி யூரியா உரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு விவசாயிகளுக்கு அடி உரம், யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவன மோசடி சுய உதவிக்குழு பெண்கள் ஆட்சியரிடம் புகார்
கிருஷ்ணகிரி, நவ.7- கிருஷ்ணகிரி நகராட்சி திருவள்ளுவர் நகரில் அன்னை தெரேசா தொண்டு நிறு வனம் சிவாஜி மற்றும் அம்சா தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கினால் வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் பாரதியார் நகரைச் சேர்ந்த கோமதி, மாபுப் அம்ரின்தாஜ்,ஜோதி ஆகி யோர் தலைமையில் இயங்கி வரும் 4 மகளிர் சுய உதவி குழுக்கள் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கடன் கிடைத்துள்ளது. இந்த தொகையை தொண்டு நிறுவன நிர்வாகிகள் சிவாஜி அம்சா வாங்கிக் கொண்டு 42 ஆயிரம் ரூபாய் வீதம் சுய உதவி குழு தலைவி களுக்கு கொடுத்துள்ளனர். இது குறித்து கணக்கு கேட்டதற்கு முறையாக தகவல்கள் கூறவில்லை என்ப தால் வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு லட்சம் ரூபாய் கடனாக வழங்கியி ருக்கிறோம். உங்கள் குழுவினர் தான் மொத்த தொகையும் அதற்கான வட்டியும் தவணை முறையில் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி கட்ட வேண்டும். முழு தொகையும் கட்டவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கி மேலாளர் கூறியுள்ளார். இதுகுறித்து, அந்த தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் சுய உதவி குழு நிர்வாகிகள் கேட்டதற்கு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த தற்காக 50 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் 8 ஆயிரம் பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனத்தினர், சுயஉதவிக்குழு பெண்களை மிரட்டும் வகையில் பேசியுள்ள னர். மேலும், ஒவ்வொரு குழுவிற்கும் 58,000 திருப்பித்தராமல் இழுத்தடித்தும் வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் கூறியதன் அடிப்படையில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா, பாதிக்கப்பட்ட கோமதி, ஜோதி, மாபுப், சாகிதா, அம்ரின்தாஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் மோசடி குறித்து புகார் மனு அளித்தனர். தொண்டு நிறுவனம் 4 குழுவிற்கும் வங்கி கடனிலிருந்து மோசடி செய்து எடுத்துக்கொண்ட பெரும் தொகையை உடனடியாக திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.