districts

மோசடியாக வாக்காளர்களை சேர்த்து ரெப்கோ வங்கி தேர்தல் தடுத்து நிறுத்த முதல்வருக்கு வலியுறுத்தல்

சென்னை,ஜன.25- அதிமுகவினரை அங்கத் தினர்களாக சேர்த்து நடத்தப்படும் ரெப்கோ வங்கித் தேர்தலை தடுத்து  நிறுத்த தமிழக முதல் வருக்கு வங்கி மீட்புக்குழுவி னர் தலைவர் குருமூர்த்தி, செயலாளர் சு.ஜீவன் ஆகி யோர் கோரிக்கை விடுத் துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: பர்மா, இலங்கை, வியட் நாம் ஆகிய நாடுகளில் இருந்து மீண்டும் தாயகம்  அழைக்கப்பட்ட தமிழர்க ளின் வாழ்வாதாரம் மேம்பட 1969 ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த கலை ஞரால் தொடங்கி வைக்கப் பட்ட ரெப்கோ வங்கி, பொன் விழா ஆண்டை கடந்து செய ல்பட்டு கொண்டு இருக்கும் ஒரு கூட்டுறவு சங்கம் ஆகும்.  கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் ரெப்கோ  நிறுவனத்தில் நடந்த லஞ்சம், ஊழல், சட்டவிதி மீறல் கள் காரணமாக ‘ரெப்கோ  வங்கி என்ற பெயரை இனி  பயன்படுத்தக் கூடாது,  சங்கம் என மட்டுமே விளம் பரம் மற்றும் பெயர்ப்பல கைகளில் பயன்படுத்த வேண்டும்’ என்று ஒன்றிய  அரசு கடந்த 2021 ஏப்ரல்  15 ல் உத்தரவை பிறப்பித் துள்ளது. ஆனால் இந்த  உத்தரவை நடைமுறைப் படுத்த  ரெப்கோ நிர்வாகம் மறுத்துள்ளது.

தாயகம் திரும்பியோரின் தனிஅடையாளமான ரெப்கோ நிறுவனம் அல்லது சொசைட்டியில் தாயகம்  திரும்பியோர் தனியுரி மையான வாக்களிக்கும், போட்டியிடும் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. தாயகம் திரும்பியோர் அல்லாத ஏனையோரும் போட்டி போடலாம் என்கின்ற அடிப்படையில் 2,75,000 அதிமுகவினரையும் அ வகுப்பு உறுப்பினராக்கி பிப்.6 ஆம்தேதி  நடைபெற உள்ள பேரவை பிரதிநிதிகள் தேர்தலில் வாக்களிக்கும், போட்டியிடும் உரிமைதரப் பட்டுள்ளது கண்டனத்திற்கு ரியது. தமிழ்நாடு அரசின் கூட்டு றவு துறை அலுவலர் இந்த தேர்தலை நடத்துகிறார். ரெப்கோ வங்கியின் 90 விழுக்காடு கிளைகள் தமிழ் நாடு, புதுச்சேரியில் உள்ளது. தமிழ்நாடு அரசின் சுமார் 2000 கோடி ரூபாய் டெபாசிட் ரெப்கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா கொடிய நோயின் தாக்கம் அதிகம் உள்ள சூழலில் பல மாநிலங் களில் நடைபெற உள்ள தேர்தலையே தேர்தல் ஆணையம் தள்ளி வைக்கும் சூழலில், ரெப்கோ விற்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்த நிறுவனம் முனைப்பு காட்டுவது ஏன்? அதிமுக பின்னணியில் சேர்க்கப்பட்ட உறுப்பினர் களை நீக்கி தாயகம் திரும்பிய அ வகுப்பு உறுப் பினர்கள் மட்டுமே வாக்களி க்கும் நிலையை உருவாக்கி ஜனநாயக முறைப்படி தேர் தல் நடத்த ஆவன செய்யு மாறு தாயகம் திரும்பிய முப்பது லட்சம் தமிழர்கள் சார்பாக தமிழ்நாடு முதல் அமைச்சரை, துறை அமைச் சர் மற்றும் துறை தலைவர் அவர்களையும் தாயகம் திரும்பியோர் அனைத்து இந்திய நலச் சங்கம் –  ரெப்கோ மீட்பு குழு சார்பில்   வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.