districts

img

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

திருவண்ணாமலை, ஜன. 10- வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த பெண்ணை கைதுசெய்ய வலியுறுத்தி தஞ்சாவூர், வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் என்ற வாலிபர்,  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.  அதில், வெட்டுவாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிலர், திருவண்ணாமலை, தானிப்பாடியில் உள்ள ஏஜென்ட் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதேபோல் தாங்களும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம் என்ற விருப்பத்தின் பேரில், தஞ்சாவூர் மாவட்டம், வெட்டுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கரிகாலன் அவரது உறவினர்கள் சதீஷ், ஜெயச்சந்திரன், இசக்கி ஆகிய 4 பேர் ஆஷா என்கிற திலகவதி என்பவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  அப்போது, நியூசிலாந்தில்  வேலை வாங்கித் தருவதற்கு ரூ. 9 லட்சம் பணம் தேவைப்படும் என ஆஷா கூறியதையடுத்து,  ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்தை அந்த பெண்ணிடம், கரிகாலன் தரப்பினர் கொடுத்துள்ளதாகவும், அதன்படி,  வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமல் அவர்  மோசடி செய்துள்ளதாகவும், அந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.