districts

img

பயன்பாடற்ற நிலங்களுக்கு பட்டா வழங்க சிறப்பு சட்டம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 16 - பயன்பாடற்ற நிலங் களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமிழக அரசு  சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முரு கன் வலியுறுத்தி உள்ளார். சிட்லப்பாக்கம் ஏரி கரையை ஒட்டி சர்வே எண் 256/1ல் பெரியார் தெரு, ஆனந்தா நகர் உள்ளது. இங்கு 60 வருடங்களாக 154  குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த பகுதியானது ‘அ’ பதிவேட்டில் அரசு புறம்போக்கு என்றுள்ளது. 1974ல் இருந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பட்டா கோரி வருகின்றனர். சர்வே எண் 256/2, 256/3, 256/4 ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கியுள்ள நிர்வாகம்,  154 குடும்பங்களுக்கு மட்டும்  பட்டா வழங்க மறுக்கிறது. இந்த ஏரியின் மறு புறத்தில் ராமகிருஷ்ணா புரம் உள்ளது. இங்கு 213  வீடுகள் உள்ளன. ஏரிக்கு அரு காமையில் சுடுகாடு, அதனை யடுத்து சாலை, அதன்பிறகு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அரசு நிர்வாகம், குடி யிருப்பு பகுதியை மட்டும் ஆக்கிரமிப்பு என்று வகைப் படுத்தி நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதனையொட்டி பெரியார் தெரு, ராம கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வியாழனன்று (ஜூன் 16) ஊர்க் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில்  பேசிய ஆர்.வேல்முருகன், சென்னை மற்றும் புற நகரில் 30க்கும் மேற்பட்ட  இடங்களில் குடியிருப்பு களை அகற்ற அரசு நோட்டீஸ்  கொடுத்துள்ளது.

பணக்காரர்கள் நிலத்தை ஆக்கிரமித்தால், மாற்று இடம் கொடுத்துவிட்டு, தற்போதுள்ள நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் அரசு சட்டத் திருத்தம் செய்கிறது. பயன்பாடற்ற ஏழை எளிய மக்கள் வாழும் இடங்களை மட்டும் அகற்ற துடிக்கிறது என்றார். பட்டா வழங்க நீதி மன்றம் தடையாக இருப்பது  போன்று அரசு மக்களை  ஏமாற்றுகிறது. பயன்படாத நீர்நிலை, விவசாய நிலங் களை வகை மாற்றம் செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, பயன்பாடற்ற பகு திகளை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு  வர வேண்டும். வழக்குகள்  நிலுவையில் உள்ள  நிலையில், குடியிருப்புகளை  அகற்ற நோட்டீஸ் கொடுப் பதை நிறுத்த வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தி னார். இந்தக் கூட்டங்களில் சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.