districts

img

பயன்பாடற்ற நிலங்களை வகைமாற்றி பட்டா வழங்க புதிய சட்டம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 3 - பயன்பாடற்ற பகுதிகளை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார். பயன்பாடற்ற நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா  வழங்க கோரி வியாழனன்று (ஜூன் 2) தாம்பரத்தில் வாழ்வுரிமை கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம், பல்லாவரம் பகுதிக் குழுக்கள் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் ஆர்.வேல்முருகன் பேசியதன் சுருக்கம் வருமாறு: சென்னை நகரம் 163 ஏரிகளின் மீது  அமைந்துள்ளது. வீட்டுவசதி வாரியம்  செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும்  ஏரியில்தான் உள்ளது. அந்த கட்டிடங் களை இடிக்க முடியுமா? பயன்பாடற்ற நிலத்தில் குடியேறி, தலைமுறை தலைமுறையாக உழைத்து வீடுகளை கட்டியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை இடித்துவிட்டு, புறாக்கூண்டு போல குடியிருப்பு தருவதை எப்படி ஏற்க முடியும்? சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி களில் ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் பல பகுதிகளை அடையாளப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு பகுதியாக அகற்ற திட்டமிட்டுள்ளனர். மாநகரப் பகுதிகளில் ஆடு, மாடுகளே இல்லாத போது மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா கொடுக்க மறுப்பது ஏன்? பீர்க்கன்கரணையில் நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப் படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்கிறது.

இதை அரசு  எப்படி அனுமதிக்கிறது? அதேசமயம், வரையறுக்கப்பட்ட குடியிருப்பு பகுதியான வரதராஜபுரம் மக்களுக்கு  பட்டா மறுக்கப்படுகிறது. குடியிருப்பு கள் இடிக்கப்பட்ட ஒரு இடத்தில் கூட நீர்நிலைகளை உருவாக்கவில்லை. மாறாக, பூங்காக்களை அமைக்கிறார் கள். குடியிருப்பு பிரச்சனையை அரசு  மனசாட்சியோடும், மனிதாபிமானத் தோடும் அணுக வேண்டும். 5 ஆண்டுகள் பயிரிடப்படாத விவசாய நிலம், பயன்படாத ஏரிகளை  வகைமாற்றம் செய்து பட்டா வழங்க  அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி  பட்டா வழங்க வேண்டும். புறம் போக்கு நிலங்களில் குடியிருப் போருக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதி அரசாணை வெளியிட்டார். அதேபோன்று தற்போதைய முதல மைச்சரும் கொள்கை முடிவெடுத்து, சட்டம் கொண்டு வர வேண்டும். உழைக் கும் வர்க்கத்தை பாதுகாக்க மார்க்சி ஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டிற்கு தாம்பரம் பகுதிச்  செயலாளர் தா.கிருஷ்ணா தலைமை  தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்  டி.ரவீந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ஜி.செந்தில் குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமோதரன், தாம்பரம் பகுதி நிர்வாகிகள் ராஜன்மணி, யு. அனில்குமார், ஆர்.விஜயா உள்ளிட் டோர் பேசினர்.