முகப்பேர்,பிப்.25- சென்னை நொளம்பூர் எஸ்.என்.பி. கார்டன் முதல் குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வெங்கட்ராமன் என்ற சோட்டா வெங்கட். 48 வயதான இவர் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவரிடம் பாபுஜி என்பவர் வேலை பார்த்து வந்தார். சினிமா பைனாஸ்சியரான பாபுஜி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலையை விட்டு நிறுத்தப்பட்டார். அப்போது வீட்டில் இருந்த நகை ஒன்றை பாபுஜி திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெங்கட்ராமன் நொளம் பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தார். வெங்கட்ராமனும் பைனான் சியர் பாபுஜியை தேடி வந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பாபுஜி, சென்னை கோயம்பேடு 100 அடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டி ருப்பதாக வெங்கட்ராமனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு 8 மணி அளவில் தனது காரில் வெங்கட்ராமன் தனது கூட்டாளி கள் இருவருடன் விரைந்து சென்று பாபுஜியை குண்டு கட்டாக காரில் ஏற்றினார். பின்னர் நொளம்பூரில் உள்ள வெங்கட்ரா மனின் வீட்டிற்கு கொண்டு சென்று சரமாரி யாக அடித்து உதைத்தனர். அப்போது பாபுஜியின் ஆடைகளை கழற்றி சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் தலை யில் பலத்த காயம் ஏற்பட்டதில் பாபுஜி சுருண்டு விழுந்து பலியானார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் பைனான்ஸ் கம்பெனி அதிபர் வெங்கட்ராமனை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போதுதான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து வெங்கட்ராமனை கைது செய்தனர்.