1982 ஜன 19 அன்று தொழிலாளர்களின் வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக போராடிய விவசாயிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நாளை சிஐடியு தியாகிகள் தினமான அனுசரித்து வருகிறது. இதனையொட்டி மத்திய சென்னைa மாவட்டம் சார்பில் லயோலா கல்லூரி அம்பேத்கர் டாடா மேஜிக் நிறுத்தத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மூத்த தலைவர் எம்.சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் பி.சுந்தரம், மாவட்ட பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.