திருத்தணி,செப்.24- டி.என்.ஆர் கண்டிகை கிராமத்தில் பாலம் கட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்டது. திருத்தணி வட்டம், எஸ்.அக்ராவரம் ஊராட்சி டி.என்.ஆர் கண்டிகை கிராமத்தில் ஏற்கெனவே, ஏரி வழியாக மண் சாலை போடப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்தது. இதனால், மழைக்காலங்களில் கிராமத்திற்கு செல்வதற்கும் கிராமத்தி லிருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருவதற்கும் இயலாத நிலை உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி விடுகிறது. முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிகளும் அவரச சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்கும் பாதை கூட கிடையாது. பருவமழை துவங்குவதற்கு முன்பா கவே, டி.என்.ஆர். கண்டிகை கிராமத்திற்கு தரைப்பாலமும சாலை வசதியும் செய்து கொடுக்க திருத்தணி ஒன்றிய அதிகாரியிடம் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமது, கிளைத் தலைவர் சீனிவா சன், பிரவீனா, மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அந்தோணி ஆகியோர் உடனி ருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.