districts

குறைக்கேட்பு கூட்டத்தை நேரடியாக நடத்த விவசாயிகள் கோரிக்கை

கடலூர், ஆக. 22- கடலூர் மாவட்டத்தில் சுமார் 4.50 லட்சம்  ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. நஞ்சை, புஞ்சை பயிர்கள், மானாவாரி பயிர்  கள், தோட்டக்கலை பயிர்கள், மலர் உட்பட  பல்வேறு விதமான பயிர் வகைகள் பயிரிடப்  படுகிறது. வாய்க்கால் பாசனம், கிணற்று பாசனம்,  மானாவாரி பாசன முறைகள் என்று கடலூர்  மாவட்டத்தில் பல்வேறு வகையான விவசா யம் நடைபெற்று வருகிறது. இதனால், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவசாயிகள் பல்வேறு விதமான சூழலை சந்தித்து வரு கின்றனர். எனவே, அவர்களுக்கான குறை களும் அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று  வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத் தும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்  திற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓராண்டிற்கும் மேலாக இக்கூட்டம் நடைபெறவில்லை. எனினும், கடந்த ஜூலை மாதம் முதல் காணொலி மூலமாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.  அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு விவசாயிகளை வர வழைத்து ஆட்சியருடன் காணொலியில் பங்  கேற்க வைக்கப்பட்டனர். தற்போது, கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொது போக்கு வரத்து இயங்கி வரும் நிலையில் விவசாயிகள்  குறைகேட்பு கூட்டத்தையும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்  நாள் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து,

தமிழ்நாடு விவசாயிகள் சங்  கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன்  கூறுகையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களில்  அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற் பார்கள். மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக குறைகளை தெரிவித்து நிவர்த்தி காண முடி யும் என்பதால் இக்கூட்டங்கள், விவசாயிகள்,  பொதுமக்களுக்கு நன்மை அளித்து வரு கிறது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் முடி வுக்கு வந்து, ஜூன் 28 முதல் பொதுமுடக்கத் தில் தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுப் போக்கு வரத்து துவங்கியுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த மாதம் நேரடியாக விவ சாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கள்ளக்  குறிச்சி மாவட்டத்திலும் நடப்பு மாதக் கூட்டம்  நடைபெறுகிறது. எனவே கடலூர் மாவட்டத்திலும் மற்ற மாவட்டங்களை போல் விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தை நேரடியாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.