திருவள்ளூர், ஜன.27- வல்லம்பேடு கிரா மத்தில் மீட்கப்பட்ட விளை நிலங்களின் உரிமை யாளர்களின் பெயரில், பட்டா வழங்கி, அதனை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியை ஒட்டியுள்ளது வல்லம்பேடு கிராமம். இங்குள்ள விவசாயிகளின் நிலங்கள் 210 ஏக்கரை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் தத்தளித்தனர்.பின்னர் பாதிக்கப்பட்ட 6 கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழ் ஒன்றிணைந்தனர். தொடர் போராட்டத்தில் விளைவாக, நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் கட்டுப் பாட்டில் வந்து 17 ஆண்டு கள் ஆகிய பிறகும் பலருக்கு இதுவரையில் பட்டா மாறுதல் செய்ய வில்லை. பட்டா மாறுதல் செய்தவர்களின் பட்டியலை கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாகு படி செய்து வரும் விவசாயிகளின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜன 27) ஆரம்பாக்கத்தில் 6 கிராம விவசாயிகளின் கோரிக்கை மாநாடு நடை பெற்றது. இதற்கு வட்ட துணைத் தலைவர் பி.ஏ.எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் வட்ட துணைச் செயலாளர் பி.ஜெ.எம்.மஸ்தான் வரவேற்றார். மாநிலச் செய லாளர் பி.துளசி நாராய ணன், மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத், வட்ட தலை வரும், ஒன்றிய கவுன்சில ருமான எம்.ரவிக்குமார், வட்ட துணைத் தலைவர் பி.கருணாமூர்த்தி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காளத்தி உட்பட்ட பலர் பேசினர். எம்.கபீர்பாஷா நன்றி கூறினார்.