districts

img

விதிகளை மீறி செயல்படும் மணல் குவாரிகளை தடை செய்ய விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம், ஏப். 10- விதிகளை மீறி செயல்படும் மணல் குவாரி களை தடைசெய்ய வேண்டும் என குறை  தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதாசுமன் தலை மையில் நடைபெற்றது. இதில் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கற்பனைச் செல்வம் பேசுகையில், கொத்தட்டை பகுதி யில் அரசின் விதிமுறைகளை மீறி 7 சவுடு  மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த  மணல் குவாரியால் அந்த பகுதி மக்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மழை காலங்களில் இந்தப் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கும். மேலும் தரையில் இருந்து  30 அடி ஆழம் வரை மணலை அள்ளி விற்பனை செய்கிறார்கள். இதனால் அப் பகுதியில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்  பாதிக்கப்படும். எனவே மணல் குவாரியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சம்பந்தப் பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் வருவதில்லை. கடை நிலை ஊழியர்களே வருகின்றனர். எனவே அடுத்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரவேண்டும் என்றும் விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பல விவசாயிகள் அவர்களின் குறைகளை பேசும்போது, சார் ஆட்சியருக்கு தமிழ் தெரியாததால் புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.