districts

img

தரமான தளவாடப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் மின்னரங்க மாநாடு கோரிக்கை

சென்னை, நவ. 5 - தரமான தளவாடப் பொருட் களை தடையின்றி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட மின்னரங்க இடைக்குழு மாநாடு வலியுறுத்தி உள்ளது. இடைக்குழுவின் 12வது மாநாடு செவ்வாயன்று (நவ.5) கிண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும், மின்துறை உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு கொடுக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமாநாட்டிற்கு இடைக்குழு உறுப்பினர் இ.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். செங்கொடியை இடைக்குழு உறுப்பினர் வி.விஜயபாஸ்கர் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை கிளைச் செயலாளர் வி.அன்பழகன்  வாசித்தார். இடைக்குழு உறுப்பினர் எஸ்.குமார் வரவேற்றார். மாநில பிரக்ஷன் உறுப்பினர் தி.ஜெய்சங்கர் தொடக்கவுரையாற்றினார். வேலை அமைப்பு அறிக்கையை இடைக்குழுச் செயலாளர் டி.பண்டாரம் பிள்ளையும், வரவு செலவு அறிக்கையை எம்.ஹெலன் தேவகிருபையும் சமர்ப்பித்தனர். தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் பா.பாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.முருகானந்தம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி  பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார் நிறைவுரையாற்றினார். இடைக்குழு உறுப்பினர் கே.ஆதன் இளங்கீரன் நன்றி கூறினார். இடைக்குழு தேர்வு 9 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக டி.பண்டாரம்பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.