districts

img

கும்மிடிப்பூண்டி பஜாரிலேயே கடை நடத்த அதிகாரிகள் அனுமதிக்கவேண்டும்

திருவள்ளூர், நவ 7- கும்மிடிப்பூண்டியில் பஜாரில் ஏற்கெனவே வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் இடத்தின் அருகி லேயே அளவீடு செய்து கடையை நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என சாலையோர சிறு கடை வியாபாரிகள் சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜாரில் பயணியர் விடுதி தொடங்கி,  ரெட்டம்பேடு கூட்டுச் சாலை வரை இரண்டு பக்கங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுகடைகள் உள்ளன. சுற்றுப்புறங்களில் உள்ள பெத்திக்குப்பம், ஆத்துப்பாக்கம், தேர்வழி, கம்மார்பாளையம், ராகவ ரெட்டிமேடு, மங்காவரம், அப்பாவரம், வழுதலம்பேடு, சாமி ரெட்டி கண்டிகை, பாப்பான் குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகள், கீரை, பூ வகைகள் போன்ற பொருட்களை கொண்டு வந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் விற்று தங்கள் பிழைப்பை நடத்தி வருகின்றனர். சிலர் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். காலம், காலமாக சிறு கடைகளை நடத்தி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நவ.9 அன்று  சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையேர கடைகளை அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்துள்ளனர். இதற்கு திருவள்ளூர் மாவட்ட சாலை யோர சிறுகடை வியாபாரிகள் சங்கம் (சிஐடியு), கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் மாற்று இடம் தருவதாக பல முறை உறுதியளித்துள்ளனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது அனைத்து கொட்டகையையும் அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை யினர் மற்றும் காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். கன்னியம்மா ரயில்வே கேட் அருகில் மாற்று இடம் கொடுப்பதாக கூறுகின்றனர். மக்கள் நடமாட்டமே இல்லாத இடத்தில் கடைகளை வைத்துக் கொண்டு எப்படி பிழைப்பு நடத்துவது. என சிறுகடை வியா பாரிகள் தங்கள் வேதனையை தெரி விக்கின்றனர். கும்மிடிப்பூண்டியில் சிறு கடை களை அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, மக்களின் நலன் கருதி ஏற்கெனவே வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் இடத்தில் கடைகளை பின்னுக்கு தள்ளி, அளவீடு செய்து கடையை நடத்த அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும், போக்குவரத்து நெரி சலை ஏற்படுத்துவது சிறுகடை வியாபாரிகளின் நோக்கம் இல்லை.  போக்குவரத்துக்கு இடையூறின்றி வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும். சிறு வியா பாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கத்தின் திரு வள்ளூர் மாவட்ட செயலாளர் டி.கோ பாலகிருஷ்ணன், வட்டத் தலை வர் வி.ஜோசப், வட்ட செய லாளர் வி.குப்பன் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர்.