சென்னை, நவ. 5 - தண்ணீர், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று நீரியல் நிபுணர் பேரா.ஜனக ராஜன் கூறினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், கணித அறிவியல் நிறுவனமும் இணைந்து ‘குழந்தைகள் அறிவியல் மாநாடு-2024’ஐ நடத்துகின்றன. ‘நீடித்த நிலையான நீர் மேலாண்மை’ எனும் பொருளில் மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட அளவில் அறிவியல் மாநாடுகள் நடைபெறுகிறது. சென்னை அளவில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு மாணவர்களை தயார்படுத்த செவ்வாயன்று (நவ.5) அண்ணாநகரில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் க.மலர்விழி, “குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு சென்னையில் உள்ள 2 ஆயிரம் பள்ளியிலிருந்தும் குழந்தைகளை பங்கேற்க வைக்க உள்ளோம் என்றார். நீரியல் நிபுணர் பேரா.எஸ்.ஜனகராஜன் கூறுகையில், தண்ணீரின் அவசியம்; முக்கியத்துவம், எதிர்கால தேவைக்கு இருப்பு உள்ளதா? காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்றவற்றை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் மாநாட்டின் மையப் பொருள். இதனை ஆசிரியர்கள் மூலமாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார். அறிவியல் இயக்கத்தின் மாநில பொரு ளாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் கல்வித்துறை அதி காரிகள், அறிவியல் இயக்க நிர்வாகிகள், மருத்துவர், அறிஞர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.