செய்யூர், நவ. 21- தீக்கதிர் செய்தி எதி ரொலி யாக செய்யூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் செயல் பட்டு வரும் அரசு வட்டார தலைமை மருத்துவ மனையில் இடிந்து விழும் நிலை யில் உள்ள கட்ட்டம், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட மருத்துவ மனை யின் அவலங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் படும் அவதிகள் குறித்து கடந்த 10ம் தேதியன்று நமது தீக்கதிரில் விரி வான செய்தி வெளி யிடப்பட்டி ருந்தது. செய்யூரில் உள்ள அரசு வட்டார தலைமை மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனை யாக மேம்படுத்த வேண்டும் என செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அரசுக்கு கோரிக்கை வைத்து முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தி ருந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் திங்க ளன்று (நவம்பர் 21) மருத்துவமனையை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து கூடு தல் கட்டிடங்கள் கட்டி தந்து நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.