பொன்னேரி, ஏப். 2 - பொன்னேரி அருகே புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. நாய்கள் கடித்து கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதிகளில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள் உள்ளிட்டவை உள்ளன. கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள் வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இதுபோன்று வரும் மான்களை நாய்கள் கடித்து கொன்றுவிடுவது அவ்வப்போது நிகழ்கிறது இதன்படி, ஏப்.1 அன்று பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் வயல் பகுதியில் தண்ணீர் தேடிவந்த புள்ளிமானை நாய்கள் கடித்து கொன்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, வனத்துறை யினர் மான்கள் இருக்கும் இடங்களில் தேவையான தண்ணீர் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்து விலங்கு களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.