districts

சென்னை முக்கிய செய்திகள்

புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா

செங்கல்பட்டு ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜன. 20- செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிமனை பட்டா இல்லாமல் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொது மக்களுக்கு உடனடி யாக குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் விவரம் வருமாறு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பட்டா கொடுத்தும் அடங்களில் ஏற்றா மல் பயனற்ற நிலையில் உள்ளது. ஆகவே, திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த கொத்தி மங்கலம் இருளர் பகுதி, உய்யாலி குப்பம், நரப்பாக்கம், கூனன் பட்டரை, இந்திராநகர், குழிப்பாந்தண்டலம்(ஊ), கலைஞர் நகர், வாயலூர், செங்கல்பட்டு வட்டத்தை சேர்ந்த தெள்ளிமேடு, வெண்பாக்கம், பெரியார்நகர், கொல்லமேடு, அம்மணம்பாக்கம், கொல்லமேடு இருளர் காலனி திருப்போரூர் வட்டத்தை சேர்ந்த ஒரத்தூர் இருளர்பகுதி இடை யான்குப்பம். செய்யூர் வட்டம் போந்தூரை, சேர்ந்த கரிக்கந்தாங்கல், அமந்தகரை, கோட்டைபுஞ்சை, அச்சரபாக்கம் வட்டத்தை சேர்ந்த தண்டரை புதுச்சேரி, சித்தாத்தூர், வண்டலூர் வட்டத்தை சேர்ந்த காரணை புதுச்சேரி ஆகிய 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டா வழங்கி அடங்களில் ஏற்றாமல் உள்ளது. ஆகவே இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அடங்களில் ஏற்றக்கோரும் மனுக்களை பரிசீலனை செய்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேய்க்கால் புறம்போக்கு நிலம் இம்மாவட்டத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் பல ஆண்டுகாலமாக மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் புலன் எண்ணில் ஒருபகுதி 2011க்கு முன்பாக நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதே புலன் எண்ணில், மற்றும் அதே நிலவகையில் மற்ற இடங்க ளில் பட்டா வழங்காத நிலை தொடர்கின்றது.  அவ்வாறு பட்டா இல்லாத திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் மனுக்கள் இத்துடன் இணைத்துள்ளோம். மேற்கண்ட மேய்காலில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கோரும் மனுக்களை, பரிசீலனை செய்து நிலவகை மாற்றம் செய்து மனைப் பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று கிராமநத்தம், கல்லாங்குத்து, வாட்டை, அனா தினம் உள்ளிட்ட நிலவகைகளை சார்ந்த இடங்களில் பல ஆண்டுகளாக வீடுகட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். திருக்கழுக்குன்றம் வட்ட த்தை சேர்ந்த நந்திமா நகர், குழிப்பாந்தண்டலம் (ஊ), நல்லாத்தூர், லட்டூர், பொம்ம ராஜபுரம், வண்டலூர் வட்டத்தை சேர்ந்த ஐயஞ்சேரி அமுதா நகர், திருவள்ளுவர் நகர் ஐயஞ்சேரி, இந்திராநகர், ஊரப்பாக்கம் திரு வள்ளுவர் நகர், ஐயஞ்சேரி. திருப்போரூர் வட்டத்தை சேர்ந்த இடையான்குப்பம் இரு ளர் பகுதி, ஒரத்தூர் இருளர் பகுதி, விப்பேடு,செங்கல்பட்டு வட்டத்தை சேர்ந்த நேதாஜி தெரு, வெண்பாக்கம் மேட்டு காலனி, வெண்பாக்கம் ராகவேந்திரா நகர், வேதநாராயணபுரம், செட்டி புண்ணியம், அன்னை தெரசா நகர் தைலாபுரம் மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த எல்.எண்டத்தூர், திருவள்ளுவர் நகர், வேடந்தாங்கள் உள்ளிட்ட கிராம மக்களின் மனுக்கள் மீது காலதாம தமின்றி மனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.

வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திடுக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

சென்னை,ஜன.20- வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் உள்ளிட்ட இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநருக்கு நெஞ்சு வலி:  விபத்தில் சிக்கிய பேருந்து

சென்னை, ஜன. 20- சென்னை அடையாறில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், மாநகர பேருந்து விபத்தில் சிக்கியது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மானாமதியில் இருந்து அடையாறுக்கு திங்கட்கிழமை ஒரு மாநகர பேருந்து புறப்பட்டு வந்தது. அப்பேருந்தை அன்பழகன் (49) என்பவர் ஓட்டினார். சந்திரன் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்து அடையாறு எல்பி சாலையில் செல்லும் போது ஓட்டுநர் அன்பழகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.  இதனால் அன்பழகன் நிலைகுலைந்தார். இதன் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த மேம்பாலத்தின் மேற்கூரை சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள், பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். நெஞ்சு வலியால் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநர் அன்பழகன் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாஞ்சா நூல் அறுத்து  காவலர் காயம்


சென்னை, ஜன. 20- சென்னை அண்ணாநகரில் மாஞ்சா நூல் அறுத்து பெண் காவலர் பலத்த காயமடைந்தார். புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (26). இவர், அமைந்த கரை காவல் நிலையத்தில் காவலராக பணி செய்கிறார்.  ஞாயிறன்று தனது மொபெட்டில்  அண்ணாநகர் மேம்பாலத்தில் செல்லும் போது அங்கு காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் ரம்யா கழுத்தில் சிக்கி அறுத்தது. இதனால்  கீழே விழுந்த அவர் பலத்தக் காயமடைந்தார். இது தொடர்பாக காவல் துறையினர வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்கள்

சென்னை, ஜன. 20- ஓஎம்ஆர் விடைத்தாளில் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்வாணையம் ஓஎம்ஆர் விடைத்தாளில் ஒரு சில புதிய நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணய இணையதளத்தில் www.tnpsc.gov.in “OMR Answer Sheet - Sample” என்ற தலைப்பின்கீழ் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்பு நிற பேனாவால் (ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1இல் பகுதி-1இன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இனிவரும் தேர்வை எழுத வரு வதற்கு முன்பு புதிய ஓ.எம்.ஆர். விடைத் தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சோத்துப்பாக்கத்தில்  கனரக வாகனங்களால் மக்கள் அவதி

செங்கல்பட்டு, ஜன. 20- சோத்துப்பாக்கம் பகுதியில் பகல் நேரங்களில் செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக வாலிபர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியிரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சென்னை, கன்னியாகுமரி தொழிற் தட சாலை விரிவாக்கமான செய்யூர் வந்தவாசி சாலை யில் கல்குவாரிகளில் இருந்து வரக்கூடிய கனரக வாகனம் ஜல்லி, செங்கல், பார்மண்,கருங்கல், எம்.சேன்டு ஆகியவை அதிகபடி யான லோடுகளை ஏற்றி செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தினசரி செல்கின்றன. இவ்வாகனங்களிருந்து ஜல்லி, எம்.சாண்ட்  சாலையில் பழுதடைந்து சாலையில் விழுவதாலும். அதிவேகமாக செல்வ தாலும் விபத்துகள் ஏற்படு கின்றது. பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் காலையிலும் மாலையிலும் அதிகமானோர் இவ்வழியில் பயணிக்கின்றனர். மக்க ளின் பாதுகாப்பை கருதி கனரக வாகனத்தின் வேகத்  தையும், நேரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மாலை 3 மணி முதல் 10 மணி வரையும் கனரக வாகன போக்குவரத்தை நிறுத்த வேண்டும் எனவே இதில் மாவட்டஆட்சியர் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி வித்திருக்கிறார்.

தாமரைப் பட்டயத்தை திருப்பி ஒப்படைக்க வந்த தியாகியின் வாரிசு! வருவாய்த்துறையினர் அதிர்ச்சி

திருவள்ளூர், ஜன.20- இந்திய சுதந்திர போராட்ட வீரருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்துடன்,  வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்காமல் வருவாய்த்துறையினர் அலைக்கழிப்பு செய்ததை கண்டித்து பட்டயத்தை அரசுக்கே ஒப்படைக்க வந்த தியாகியின் வாரிசுகளால் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை பாராட்டும் விதமாக 1972 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி, தியாகி கருப்பையா என்பவருக்கு தாமரைப் பட்டயம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருப்பாலைவனம் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.  அதேபோல் 1973 ஆம் ஆண்டு ஒன்றிய அரசும் தாமரைப் பட்டயம் வழங்கி கவுரவித்துள்ளது.இதனையடுத்து கருப்பையா அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால் வருவாய்த்துறை சார்பில் அதற்கு முறையான பட்டா வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கருப்பையா மறைவிற்குப் பிறகு அவரது வாரிசுகளில் ஒருவரான சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா வழங்க வழக்கு தொடர்ந்தார். வழக்கை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பொன்னேரி ஆர்டிஓ-வுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆர்டிஓ மற்றும் தாசில்தார் ஆகியோர் பட்டா வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கலைஞரால் வழங்கப்பட்ட தாமரைப் பட்டயத்தை கருப்பையாவின் வாரிசுதாரர்களான மாரிமுத்து, ஆனந்தன், சங்கர், இந்திராணி, கஸ்தூரி, மல்லிகா ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திரும்ப ஒப்படைக்க வந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் புறப்பட்டு சென்றனர். சுதந்திர போராட்ட தியாகிக்கு அரசால்  வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்கள்

சென்னை, ஜன. 20- ஓஎம்ஆர் விடைத்தாளில் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி செய்துள்ளது. அரசு துறைகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான காலி பணி யிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓ.எம்.ஆர். விடைத்தாளில் சில மாற்றங்களை டி.என்.பி.எஸ்.சி. செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேர்வாணையம் ஓஎம்ஆர் விடைத்தாளில் ஒரு சில புதிய நடை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஒஎம்ஆர் விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணய இணையதளத்தில் www.tnpsc.gov.in “OMR Answer Sheet - Sample” என்ற தலைப்பின்கீழ் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்பு நிற பேனாவால் (ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1இல் பகுதி-1இன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே. தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இனிவரும் தேர்வை எழுத வரு வதற்கு முன்பு புதிய ஓ.எம்.ஆர். விடைத் தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.