சென்னை, ஜூலை 21- சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக கடந்த மாதம் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் பொது மக்களிடம் கருத்து கேட்கப் பட்டது. மொத்தம் 19,405 புகார் மனுக்கள் பெறப் பட்ட நிலையில் அவற்றுள் 14,098 மனுக்களில் திருக்கோயில் நிர்வாகத் தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப் பட்டது. மேலும் 28 முக்கிய புகார்கள் வந்துள்ளன. அதில் பெண்களை மரி யாதை குறைவாக நடத்துவ தாகவும், குழந்தை திரு மணம் நடத்துகிறார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்து தர வில்லை என்றும் கோவில் நலனில் அக்கறையுள்ள நபர்களிடம் இருந்து பெறப் பட்ட மனுக்களில் சொல்லப் பட்டுள்ள குறைபாடுகள் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க சிதம்பரம் நட ராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சபையின் செய லாளருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.