districts

img

பட்டா கேட்டு போச்சம்பள்ளியில் சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.10- பட்டா வழங்குவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி  போச்சம்பள்ளி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போச்சம்பள்ளி வட்டத்தில் 40 ஆண்டு களுக்கு மேலாக வசிக்கும் நிலம் வீடற்ற,ஏழை எளிய, தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா,பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருப்போருக்கு வீடு களுக்கு பட்டாவும் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சி சார்பில் பல முறை மனுக்கள் கொடுத்து போராட்டம் நடத்தப்  பட்டுள்ளது. ஆனால் வட்டாட்சியர் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அரசம்பட்டியில் தலித் மக்களுக்கு அரசு கொடுத்த வீட்டு மனைகள் ஒட்டிய அரசு விளையாட்டு மைதானத்தை சிலர் ஆக்கிர மித்து வீடு கட்டியுள்ளனர். இதுகுறித்தும்  பலமுறை புகார் மனு அளித்தும் வட்டாட்சியர் எந்த நடவ டிக்கையும் எடுக்காமல்  உள்ளார். மேலும் 2023 அக்டோ பரில் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்ற போது வட்டாட்சியரும் வருவாய்துறை அலுவலர்க ளும் ஆய்வு செய்து  உட னடியாக இலவச வீட்டு மனைப் பட்டாக்களும், வீடுகளுக்கு பட்டாக்களும் வழங்குவதாக உத்தர வாதம் அளித்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த நடவடி க்கையும் எடுக்காததால்  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி  போச்சம்பள்ளி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு  போச்சம்பள்ளி வட்டம் சிபிஎம் செயலாளர் சாமு தலைமையில் காத்தி ருக்கும் போராட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் இளவரசன், வட்டக் குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர் கடல்   வேந்தன்,ரங்கசாமி, வஜ்ர வேல் அன்பரசு, விவசாயி கள் சங்க வட்டப் பொரு ளாளர் சின்னராஜ், கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை யில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் 7 பேருக்கு உடனடியாக பட்டாக்களை அங்கேயே வழங்கி னார். தொடர்ந்து தகுதி யானவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களும் வீடு களுக்கு பட்டாக்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கு வதாகவும் உறுதியளித்தார். கோரிக்கைகள் வெற்றி அடைந்ததால் தற்காலிக மாக காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.