திருப்பத்தூர், மே 20- திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட தாலுகா பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நெல், பருத்தி, சோளம் பயிர்கள்அறுவடைக்கு தயாராக இருந்தன. தொடர் மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை நட்டம் அடைந்துள்ளனர்.