சென்னை, செப். 10 - சிஐடியு மத்திய சென்னை மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று (அக்.10) அரும்பாக்கத்தில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க மாக அண்ணாநகர் வளை விலிருந்து மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் தலைமையில் பேரணி நடைபெற்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பேரணி மாநாட்டு அரங்க மான சிந்தனை சிற்பி சிங்காரவேலர் திடலை (கமலாம்பாள் மண்டபம் - அரும்பாக்கம்) வந்த டைந்தது.
நினைவுச்சுடர்
மாநாட்டு அரங்கில் தோழர் மைதிலி சிவராமன் நினைவுச் சுடர் பயணத்தை சேத்துப்பட்டிலிருந்து தி.நரேந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகி வே.ஆறுமுகம் கொண்டு வந்த இந்த சுடரை ஏ.எல். மனோகரன் பெற்றுக் கொண்டார். தோழர் டி.என்.நம்பிரா ஜன் நினைவுச் சுடர் பயணத்தை துறைமுகம் அருகிலிருந்து மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன் தொடங்கி வைக்க, ஆ.கிரு ஷ்ணமூர்த்தி ஏந்திவர, ஆர்.அருள்குமார் பெற்றுக் கொண்டார். தோழர் ஏ.ஜி.காசிநாதன் நினைவுச் சுடர் பயணத்தை அயனா வரத்திலிருந்து பி.சீனிவா சன் தொடங்கி வைக்க, பா.ராஜாராமன் ஏந்தி வந்த சுடரை எம்.பழனி பெற்றுக் கொண்டார். மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகிலிருந்து ‘மே தின நூற்றாண்டு நினைவு செங் கொடி’ பயணத்தை வி.தயா னந்தம் தொடங்கி வைக்க, எம்.தயாளன் ஏந்திவர, எஸ். செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.
கொடியேற்றம்
மாநாட்டு செங் கொடியை மூத்த தலைவர் வெங்கட்ராமனா ஏற்றி னார். தியாகிகளின் உரு வப்படத்தை மூத்த தொழிற் சங்க தலைவர் வே.மீனாட்சி சுந்தரமும், படக்கண் காட்சியை பேபிஷகிலாவும் திறந்து வைத்தனர்.
நூல் வெளியீடு
மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் எழுதிய ‘சவார்க்கரை வரலாறு மன்னிக்காது’ என்ற நூலை சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் வெளியிட, கே.கார்த்திக் பெற்றுக் கொண்டார். ‘சென்னை நகரில் தொழிற்சங்கம்’ எனும் ஆவணப்படத்தை சிஐடியு மாநிலப் பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு தொடங்கி வைத்தார்.
பொதுமாநாடு
மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் தலைமை யில் தொடங்கிய பொது மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் பெ.சீனிவா சன் வரவேற்க, துணைச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு மாநாட்டை தொடங்கி வைத்தார். பிரதிநிதிகள் மாநாட்டில் வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டையும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் எஸ்.சந்தானமும் சமர்ப்பித்தனர்.