உலகின் மிகப்பெரிய ‘சதுரங்க திரு விழா’ செஸ் ஒலிம்பியாட் தமிழகத் தின் வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் ஜூலை 28 அன்று தொடங்குகிறது. இது சதுரங்க விளையாட்டு உலகில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போர் காரணங்கள் சர்வதேச கூட்டமைப்பு நான்கு மாத கால இடைவெளிக்குள் இந்தியாவின் சதுரங்க தலைநகரமான சென்னையில் ‘செஸ் ஒலிம்பி யாட்’ போட்டியை நடத்த முடிவு செய்தது. 100 கோடி ரூபாய்... தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறை யன்பு தலைமையில் ஒரு குழு அமைத்து மட்டு மன்றி, போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடியை ஒதுக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போட்டிக்கான முன்னேற்பாடு களை சிறப்பாக நடத்தி முடித்துவிட மேலும் ரூ.10 கோடியை கொடுத்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதுமட்டுமின்றி, மாமல்லபுரம் வரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக் கிறது. இதற்காக தமிழக அரசு ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து பணிகளை துவங்கியுள்ளது
சுடர் ஓட்டம்...
ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை மாமல்லபுரம் நகரில் நடைபெறும் 44 செஸ் ஒலிம்பியாட் போட்டியை பொதுமக்களி டையே மேலும் பிரபலப்படுத்த ஜூன் 19 அன்று ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தில்லியில் துவக்கி வைத்தார். இந்த ஓட்டம் தில்லியிலிருந்து ஸ்ரீ நகர், அமிர்தசரஸ், மும்பை, பெங்களூரு உள்பட 74 நகரங்களைக் கடந்து ஜூலை 28 ஆம் தேதி சென்னையை வந்தடைகிறது.
சாதனைப் புத்தகத்தில்...
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தொடரின் அதிகாரப்பூர்வ போட்டி 1927 ஆம் ஆண்டு லண்டனில் நடந்தது. 16 நாடுகளில் இருந்து மிகக் குறைவான வீரர்களே பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக, 2018ஆம் ஆண்டில் ஜார்ஜியா நாட்டின் படுமி நகரில் 179 நாடுகளிலிருந்து 334 அணிகள் பங்கேற்றதே சாதனையாக இருந்து வந்தது. தற்போது மாமல்லபுரத்தில் சுமார் 187 நாடுகளிலிருந்து 343 அணிகளில் உலகின் தலை சிறந்த முன்னணி வீரர்கள் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இதில் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் அடங்கும். ஒலிம்பிக் போட்டிகளில் பிரத்யேக மாக ஏற்றப்படும் தீபம் போல வரலாற்றிலேயே முதல் முறையாக ஒலிம்பியாட் போட்டிகளுக்கு என தீபம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது நாட்டின் அனைத்து மாநில பெரு நகரங்களுக் கும் எடுத்துச் செல்லப்பட்டு இறுதியில் சென்னை யை வந்தடைகிறது. மேலும் வரும் காலங் களில் இந்தியாவில் இருந்தே செஸ் ஒலிம்பியாட் தீபம் துவங்கப்படும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பையும் நூலக சதுரங்கக் கூட்ட மைப்பு அறிவித்திருப்பதால் மாமல்லபுரம் ஒலிம்பியாட் போட்டி சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது.
சாதனையும்-சோவியத் ஒன்றியமும்..
1924 ஆம் ஆண்டு முதல் முதலாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்பட்டது. 1927ஆம் ஆண்டு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக செஸ் ஒலிம்பியாட் நடத்தப்பட்டது. இந்த மூன்றுமுறையும் அங்கேரி அணி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றது. 1952 முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற சோவியத் ஒன்றிய அணியும் வீரர்களும் 1974 ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ச்சி யாக 18 முறையும் முதலிடத்தையும் தங்கப் பதக்கத்தையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். மக்கள் சீனம் இரண்டு முறையும், இந்தியா ஒரு முறையும் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டத்தையும் தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கிறது.
தொடங்கியது கவுண்டவுன்...
மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் கான 50 நாட்களுக்கான கவுண்டவுனை தொடங்கி வைத்த முதலமைச்சர் ‘தம்பி’ என்று பெயரிடப்பட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டையுடன் வணக்கம் சொல்லும் சதுரங்க குதிரை சின்னத்தையும் இலட்சினையையும் வெளியிட்டார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் 20 பேர் செய்யப் பட்டுள்ளனர். இந்த அணிக்கு உலக ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்யா, உக்ரைன் வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, அங்கேரியா, அர்மேனியா, சீனா, போலந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, நெதர்லாந்து, செக்கோஸ்லோவியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் பங்கேற்கின்றன.
-சி. ஸ்ரீராமுலு