பனிமூட்டம்: ரயில்கள் வேகம் குறைப்பு
வேலூர், நவ. 28- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டு கிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன. அதிகபட்ச மாக திங்கட்கிழமை அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இத னால் சென்னை - அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப் படும் ரயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன. திங்களன்று காலை சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 4 மின்சார ரயில்கள் தாமதமாக சென்றன. கடும் பனி மூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது என ரயில்வே அதி காரிகள் தெரிவித்தனர். அதேபோல் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனி மூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலை யில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன. பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள தால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தக்காளி தோட்டத்தை நாசம் செய்த யானைகள்
வேப்பனப்பள்ளி, நவ. 28- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே தமிழக எல்லை பகுதியான எப்ரி மற்றும் நேரலகிரி வனபகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. கடே கவுண்டனுர் பகுதியில் இரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த முனியப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்து தக்காளி செடிகளை நாசம் செய்துள்ளது. இதனால் சுமார் 20,000 ரூபாய் மதிப்பி லான தக்காளி செடிகள் சேத மடைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு முகா மிட்டுள்ள 7 காட்டு யானைகளை வேறு வனபகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்ட னர். மீண்டும், மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருவது அப்பகுதி விவ சாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.
திடக்கழிவு கட்டிடம் அமைக்க எதிர்ப்பு
ஓசூர், நவ. 28- ஓசூர் மாநகரில் விளையாடுவதற் கென்று உள்ள விளையாட்டு மைதானம், தளி சாலையில் உள்ள அந்திவாடி ஸ்டேடியமாகும். இந்த ஸ்டேடியம் 7.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இந்த ஸ்டேடியத்தை ஒட்டி சுமார் 45 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்திவாடி ஸ்டேடியத்தையும், அரசு நிலத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக அப்பகுதி விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அதே பகுதி யில் 1 ஏக்கர் நிலத்தில் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், திட கழிவுகள் பிரிக்கும் கட்டி டம் அமைக்கும் பணியில் ஈடுபட்டி ருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்த னர். இந்த பகுதியில் அந்த கட்டிடம் கட்டப் பட்டால் துர்நாற்றம் வீசுவதுடன்,, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க கோரிக்கை
மத்தூர், நவ. 28- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள மருதேரி தென்பெண்ணையாற்றில் வீரமலை பஞ்சாயத்து கரடியூர் கிராம மக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக மருதேரி ஆற்றில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உறை கிணறு அமைக்கப்பட்டு இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிராமத்திற்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்க ளுக்கு முன்பு மருதேரி உயர் மட்ட ஆற்றுப்பாலத்தின் மீது செல்லும் இரும்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விண்ணை நோக்கி பாய்கிறது. அந்த தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. இதனால் வீரமலை கிராம மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
ஆரணி, நவ. 28- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இரும்பேடு அரிகரன் நகர் ராஜீவ் காந்தி தெரு வில் வசிப்பவர் மனோகரன். இவர் பட்டு சேலை உற்பத்தி செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி. இவர்கள் ஞாயிற்றுக் கிழமை குடும்பத்துடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் இரவு வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், 2 லட்ச ரூபாய், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மனோகரன் ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.