கண்கள் தானம் செய்த ஆசிரியை
தஞ்சாவூர், ஆக.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, நாட்டாணிக் கோட்டை வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பொறியாளர் எஸ்.பி.சோலைமலை. இவ ரது மனைவி எஸ்.சுந்தரி, ஆசிரியையாகப் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு எஸ்.சோலை ராஜா என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஆசி ரியை சுந்தரி உடல்நலக் குறைவால் செவ்வாயன்று காலமானார். இதைய டுத்து, அவரது கண்கள் தானமாக வழங்க அவரது குடும்பத்தி னர் முடிவு செய்தனர். இதுகுறித்து, பேராவூரணி லயன்ஸ் சங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
விழுப்புரம், ஆக.3- விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கோபிநாத் வயது 25. . அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் கலைச் செல்வி (23) இவர்கள் இரு வரும் கடந்த சில நாட்க ளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வரின் வீட்டிற்கு தெரிய வந்ததும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனை யடுத்து, கோபிநாத், கலைச்செல்வி இருவரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு முன்பு அம்மா வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கலைச்செல்வி வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள விவ சாய கிணறு ஒன்றில் கலைச் செல்வி பிணமாக மிதந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த பெரியதச்சூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு துறையி னர் உதவியுடன் செல்வி உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண மான இரண்டு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறை யில் கிணற்றில் பிணமாக கிடந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணாமலை நகர்: செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி
சிதம்பரம், ஆக 3- சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி தலைமை தாங்கினார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், பரிசு, கேடயம், மெடல் வழங்கப்பட்டது. பேரூராட்சி கண்காணிப்பாளர் ,மூவேந்திர பாண்டியன், மாநில பேரூராட்சி ஊழியர் சங்கத் தலைவர் தங்கவேல், கடலூர் மாவட்ட சதுரங்க விளையாட்டு கழக செயலாளர் பாண்டியன், பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ், கடலூர் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் பியர்லின் வில்லியம் நன்றி கூறினார்.
‘கியூ ஆர் கோட்’ மூலம் பயணச்சீட்டு பெற்றால் 20% தள்ளுபடி
சென்னை, ஆக.3- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘கியூ ஆர் கோட்’ மூலம் பயணச்சீட்டு வாங்கினால் 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இனி வரிசைகள் இல்லை, கியூஆர் மட்டுமே’ என்ற திட்டத்தை சென்னை மெட்ரோ மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் புதனன்று கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலை யத்தில் அறிமுகம் செய்து வைத்தார். மெட்ரோ ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. யுபிஐ, இணைய வங்கி, கடன் மற்றும் சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள் மூலமும் பயணச்சீட்டு கட்டணத்தை செலுத்தலாம். யுபிஐ செயலியில் ‘க்யூஆர் கோடை’ ஸ்கேன் செய்தால், பயணச்சீட்டு பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். அதில், நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தேர்வு செய்து பணத்தை செலுத்தினால், க்யூஆர் பயணச்சீட்டுகள் தானாகவே உருவாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்யப்படும். இந்த முறையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுபவர்களுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.