districts

சென்னை விரைவு செய்திகள்

சந்தனக் கட்டை கடத்தியவர் கைது

வேலூர், டிச. 30- வேலூர் கோட்டை அருகே தெற்கு காவல் நிலைய காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மடக்கினர். நிற்கா மல் வேகமாக சென்றனர். இதைத் தொடர்ந்து விரட்டிச் சென்று பிடித்த னர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.  பின்னர் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், பிடிப்பட்டவர் ஆரணி அருகே உள்ள சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (28) என்பதும், தப்பி ஓடிய வர் அதே பகுதியைச் சேர்ந்த மணி கண்டன் என்பதும் தெரியவந்தது. 20 கிலோ எடை கொண்ட 6 சந்தனக் கட்டை, அதை வெட்ட பயன்படுத்திய கத்தி, 2 ரம்பத்தையும் பறிமுல் செய்த காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்தனர்.


மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு  ரூ. 94.26 கோடி கடன்

கள்ளக்குறிச்சி, டிச.30- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்  சுயஉதவி  குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவி லான கூட்டமைப்புகளுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி யில் நடைபெற்றது.  தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக முதல்வர் இதில் கலந்துகொண்டார். கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் ஷ்ரவன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்தி கேயன், மணிக்க ண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட னர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 329 மகளிர் சுய உதவி குழுக்க  ளுக்கு வங்கி கடன் ரூ.12.20 கோடியி லும், 87 ஊராட்சி அளவிலான கூட்ட மைப்புகளுக்கு பெருங்கடன் ரூ.82.06 கோடியில் என 416 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.26 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டது.  மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய  நாராயணண், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தமிழ்நாடு ஊரக வாழ்வா தார இயக்கக திட்ட இயக்குநர் சுந்தராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


தனியார் காப்பக சிறுவர்கள் மாயம்

கடலூர்,டிச.30- கடலூர் வன்னியர் பாளையத்தில் தனியார் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தைகள் நலக்குழு மூலமாக கடலூர் குப்பன்குளம் சேர்ந்த 12 வயது சிறுமி, 7 வயது சிறுவன் ஆகியோரை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். புதிதாக விடப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்சா சிறுமி மற்றும் சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.


ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

செய்யாறு, டிச. 30- செய்யாறு நகரத்தை சேர்ந்தவர் செல்வகுமார். டைல்ஸ் ஒட்டும் தொழி லாளி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சிவா என்ற மகனும், சில்பா என்ற மகளும் உள்ளனர். சிவா செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நண்பர்களுடன் செய்யாற்றில் குளிப்பதற்காக சென்ற சிவா, ஆற்றில் யானை பள்ளம் என்ற இடத்தில் எதிர் பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் முயற்சி செய்தும் மீட்க முடியவில்லை. இதனையடுத்து, அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு  தீயணைப்பு வீரர்கள் இரவு 10 மணி வரை தேடியும் மாணவன் கிடைக் காததால் திரும்பிச் சென்றனர். பிறகு, யானை பள்ளத்திலிருந்து சுமார் 30 அடி தொலைவில் மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே, இதே  பள்ளத்தில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.