districts

சென்னை முக்கிய செய்திகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூரில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது, காரை ஏற்றி படுகொலை செய்த ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் அஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை ரத்து செய்யக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் டி.கே.வெங்கடேசன் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைச் செயலாளர் எ.வி.ஸ்டாலின் மணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், சிபிஐ நிர்வாகி தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கடலூர் ஜவான்ஸ் பவன் அருகில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.கே.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் எஸ் தக்ஷிணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட செயலாளர் பி.கருப்பையன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், சிபிஐ வட்டச் செயலாளர் என்.சுந்தர்ராஜா, மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்தியாவில் வாழும் 8 விழுக்காடு பழங்குடி மக்களுக்கான திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாததை கண்டித்தும், பழங்குடியினர் உப திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும், வன உரிமைச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.