districts

சென்னை முக்கிய செய்திகள்

ரூ.88 கோடியில் வெள்ளதடுப்பு பணிகள்

 சென்னை, மார்ச் 29- சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடையாறு உப வடி நிலத்தில் போரூர், கெருகம் பாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க 6  வெள்ளத் தடுப்பு பணிகள்  ரூ.88 கோடியில் மேற் கொள்ளப்படும்.  வெள்ள நீர் மேலாண் மையை மேம்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் நீர்  தேக்கங்களில் உள்ள வெள்ளை கதவுகளின் இயக்கம், சிறப்பு மென் பொருள் உதவியுடன் தானியங்கி மயமாக்கப் படும். இப்பணி ரூ.32  கோடியில் மேற்கொள்ளப் படும்.


திதாக  25 துணை   மின் நிலையங்கள்

சென்னை, மார்ச் 29- புதிதாக 25 துணை  மின் நிலையங்கள அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். புதனன்று (மார்ச் 29) பேரவையில் கேள்வி நேரத்தின்போது  அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சாமுவேல் ஜோசப், தமது தொகுதியில்  பூமிக்கு மேலே சென்று கொண்டிருக்கும் மின்சார வயர்கள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படுமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் அம்பத்தூர் மட்டுமல்ல சென்னையில் ஏழு கோட்டங்களில் புதைவிட மின் கம்பிகளாக மாற்றுவதற்கு நிர்வாக அனுமதி கிடைத்திருக்கிறது என்றார்.


செயற்கை  தொழில்நுட்பத்தில் நோயாளிகள் கண்காணிப்பு  

சென்னை, மார்ச் 29-   நாட்டிலேயே முதல்முறையாக  AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்கும் சாதனம் (ஆர்பிஎம்)  சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களுருவை டூசி (Dozee) என்ற நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள  இந்த சாதனம்  நோயாளிகளின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் மேம்படுத்தும் என்று விஜயா மருத்துவம் மற்றும் மருத்துவ கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்  பி. பாரதி ரெட்டி கூறினார். நோயாளிகளின் தூக்க முறை, சுவாச விகிதம், இதயத் துடிப்பு, எஸ்பிஓ 2 அளவுகள், ரத்த அழுத்தம், வெப்பநிலை போன்றவற்றையும் இந்த சாதனம் கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார். நோயாளியின் நிலை மோசமாகத் தொடங்கினால், உடனடியாக நடவடிக்கைகளை செயல்படுத்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை எச்சரிக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாகி கௌரவ் பர்ச்சானி தெரிவித்தார். கீழ்ப்பாக்கம். திருநெல்வேலி. மதுரை கோவை அரசு மருத்துவக்கல்லரி மருத்துவமனைகளில் இதுஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


சிகிச்சைக்கு நிதியுதவி செய்வோர்  கவனமாக செயல்பட அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 29- மருத்துவ சிகிச்சைக்காக நிதி தேவைப்படுவோருக்கு அளிக்கப்படும் நிதி  உரிய பயனாளிகளை சென்றடைய நிதி உதவி அளிப்போர் கவனமாக இருக்க முன்னணி மருத்துவ நிதியுதவி தளமான  இம்பாக்ட் குரு யோசனைகளை அளித்துள்ளது. தொழில்நுட்பத்தின் வாயிலாக எளிதாக நிதியுதவி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் நன்கொடையாளர்களையும்  பயனாளிகளையும் தவறான நபர்கள்  ஏமாற்ற வாய்ப்புண்டு. எனவே  நிதிதிரட்டும் இணையதளத்தில் மட்டும் நன்கொடை  அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களில் அல்லது அவர்களோடு தொடர்பு உடையவர்களால்  பகிரப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. 


கழிவுநீர் இறைக்கும் தற்காலிகமாக மூடல்  

சென்னை,மார்ச் 29-  கொடுங்கையூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 31 ஆம் தேதி காலை 6 மணி முதல்  1.4.2023 காலை 6 மணிவரை  செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை   குடிநீர் வாரியம்  கேட்டுக்கொண்டுள்ளது.