குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தேசத்தை பாதுகாப்போம், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாணவர், வாலிபர், மாதர் சங்கம், சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
***
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம் கரகுப்பம் ஊராட்சி கொல்லப்பள்ளி கிராமத்தில் இருளர் காலனியில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.