districts

சாலை விபத்தில் உடலில் 10 இடங்களில் எலும்பு முறிவு நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, ஜூலை 30- சாலை விபத்து காரணமாக உடலில்  10 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட  நோயாளிக்கு புரோமெட் மருத்துவமனை யின் பல்துறை மருத்துவ குழு சிறப்பு சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளது. சென்னையைச் சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சுய நினைவை இழந்த நிலையில் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்துடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே வசித்து வரும் அவர் கடந்த மார்ச் மாதம் 16–ந்தேதி  சுமார் மாலை 5 மணி அளவில் மோட்டார்  சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது,  அவர் மீது ஒரு லாரி மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.  அதில் அவருக்கு உடல் முழுவதும் பல்வேறு  இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த நிலை யில் அவர் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை குழுவினர்  சிகிச்சை அளித்தனர்.  சிடி ஸ்கேன் சோதனை யில் முகத்தின் கீழ் நாசி பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும், மேல் உதடு சிதைந்து இருப்பதும், அத்துடன் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்ப தும் தெரிய வந்தது. அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில்  அதிக ரத்த அழுத்தமும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவி யுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள்  முதலில் இடுப்பு மற்றும் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டு இருந்த எலும்பு முறி வுக்கு சிகிச்சை அளித்தனர். விபத்துக்குப் பிறகு அவரால் சாதாரணமாக சுவாசிக்க முடியாமல் போனதால், அவருக்கு மயக்க  மருந்து செலுத்தப்பட்டு, நுரையீரலுக்கு ஆக்சிஜனை வழங்குவதற்காக மூச்சுக் குழாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. அதன் பின் அவருக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மன நல மருத்துவரின் ஆலோ சனையும் அளிக்கப்பட்டது. 31 நாட்கள்  தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்து வமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று  புரோமெட் மருத்துவமனை நிர்வாக  இயக்குநர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்  கூறி னார்.