சென்னை ஜன.12- பனைத் தொழிலுக்கு வாரி யம் அமைத்திருப்பது போல் தமிழ் நாடு முந்திரிக் கழகம் ஏற்படுத்தி முந்திரி தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று சட் டப்பேரவையில் அமைச்சர் தங் கம் தென்னரசு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சின்னதுரை, “தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமான புதுக் கோட்டையில், கந்தர்வகோட்டை தொகுதி மிகவும் பின்தங்கியிருக்கி றது. வேளாண்மைத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டி ருக்கக் கூடிய மக்கள் அதிகம் உள்ள னர். பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் முந்திரி சாகுபடி செய்து வரு கின்றனர். விவசாயிகள் மற்றும் அரசு வனக்காடுகளில் முந்திரி உற்பத்தி அதிகரித்து வருவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காத முந்திரி பழத்திலிருந்து மதிப்புக்கூட்டப் பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை துவக்கி சந் தைப்படுத்த அரசு வரவேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, “தொழில்துறையை பொருத்த மட்டில் இத்தகைய தொழிற்சாலை களை யாரேனும் தனியார் நேரடி யாக துவக்க முன் வருவார்கள் என்றால் அரசு அதற்கு அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு காத்திருக்கிறது.
தொழில்துறையை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை என்று பெயரை மாற்றி அமைத்தி ருப்பதற்கு காரணம், இத்தகைய தொழிற்சாலைகள் உருவாக்கு வதற்கான தகுந்த சூழ்நிலைகள் அந்த இடங்களில் இருக்கும் என் றால் அத்தகைய தொழிற்சாலை யை நிறுவுவதற்கு தனியார் நிறு வனங்கள் முன் வரும் என்றால் தொழில்துறை அனைத்து வகையி லும் அத்தகைய நிறுவனங்களுக்கு தன்னுடைய ஒத்துழைப்பை வழங் கும். தொழிற்சாலை உருவாவ தற்கு உறுதுணையாக இருக்கும்” என்றார். தொடர்ந்து பேசிய சின்ன துரை, “கடலூர், கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்பு ரம், புதுக்கோட்டை மாவட்டங்க ளில் முந்திரி அதிகம் விளைகிறது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. பதப்படுத்தப்பட்ட முந்திரிப் பருப்பு வணிக ஏற்றுமதியில் ஒன்றிய-மாநில அரசுகள் அந்நிய செலாவணி ஈர்த்திட வாய்ப்புள் ளது. அதனால் முந்திரி விவ சாயத்தை அதிகரிக்கவும் முந்திரி பழச்சாறு, முந்திரி எண்ணெய், பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பு தயாரிக்கும் தொழிற்சாலை களுக்காக பனைத் தொழிலுக்கு வாரியம் அமைத்திருப்பது போல் தமிழ்நாடு முந்திரிக் கழகம் ஏற் படுத்தி முந்திரி தொழிலை பாது காத்திட முன்வருமா? என துணைக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச் சர் தங்கம் தென்னரசு, “ முந்திரி தொழிலாளர் நலவாரியம் அமைப் பது அரசின் கொள்கை முடி வுக்குட்பட்டது. இது குறித்து முதல மைச்சர் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்”என்றார்.