அம்பத்தூர், பிப். 15- ஆவடி 10ஆவது வார்டில் சமூக நலக் கூடம், விளையாட்டு திடல் அமைக்கப்படும் என்று அந்த வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.ஜான் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சிக் குட்பட்ட 10 ஆவது வார்டில் தென்றல் நகர், தென்றல் நகர் கிழக்கு, சரஸ்வதி நகர், அம்பேத்கர் நகர், மூர்த்தி நகர், வள்ளலார் நகர், ஜாக் நகர், விக்னேஷ் நகர், வண் ணன் குளம் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டிருந்தா லும் இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. சாலை, சுகாதாரம் உள் ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் நீண்டகால மாக தீர்க்கப்படாமல் உள்ளன. தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலை மையிலான மதச்சார்ப்பற்ற கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் அ.ஜான் போட்டியிடு கிறார். இந்த தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலரா னால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் கேட்கப் பட்டதற்கு, “ நான் தொடர்ச் சியாக இந்த பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறேன். இந்த பகுதியில் சில பகுதிகள் நீர்பிடிப்பு பகுதி எனக் கூறி பட்டா வழங்க மறுக்கிறார்கள். அனைவருக்கும் பட்டா கிடைப்பதற்கான முயற் சியை மேற்கொள்வேன்’’ என்றார்.
ஆவடி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகை யில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குழாய் மூலம் குடிநீர் வழங்கவும், தூர்வாரப்படாமல் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி தன்ணீர் தேங்கா மல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பேன். மேலும் இங்கு சமூக நலக்கூடமும், விளை யாட்டு திடலும் அமைத்து தருவேன். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கு தேவை யான பயிற்சி வகுப்புகள் எடுக்கவும், அரசுப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வின் போது இலவசமாக சிறப்பு வகுப் புகள் (டியூஷன்) எடுக்கவும் வசதிகள் செய்து தரப்படும். மேலும் குற்றச்சம்பவங் களை தடுக்கும் வகையில் புறநகர்காவல் உதவி மையம் அமைக்கப்படும். மேலும் பொதுமக்கள், வணிகர்கள் உதவியுடன் சிசிடிவி கேமிரா பொருத்தப் படும். இங்குள்ள உட்புறச் சாலைகளை படிப்படியாக சீரமைக்கவும் குப்பைக் கழி வுகளை தினசரி அகற்றவும் நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக அரசின் நலத்திட்ட உதவிகளை எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பெற்றுத் தரு வேன். மக்களோடு மக்க ளாக நின்று அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என்றார் ஜான்.