மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை ஆதரித்து வெள்ளியன்று (ஏப்.2) அமைந்தகரையில் இந்திய மாணவர் சங்கத்தினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்டச்செயலாளர் எல்.விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பை திமுக பகுதி பொருளாளர் பா.பிரபு தொடங்கி வைத்தார். சிபிஎம் பகுதிக் குழு உறுப்பினர் முத்துராஜன், திமுக நிர்வாகி மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.