அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் அம்பத்தூர் மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜன. 19- அம்பத்தூரில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என மாதர் சங்க மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி மாநாடு மங்களபுரத்தில் ஞாயிறன்று (ஜன.19) நடை பெற்றது. பி.மகாலட்சுமி தலைமை தாங்கினார். அகில இந்திய துணைச்செயலாளர் பி.சுகந்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஜி.மூர்த்தி (சிஐடியு) வாழ்த்திப் பேசினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக எஸ்.நர்மதா வரவேற்றார். லட்சுமி நன்றி கூறினார். தீர்மானங்கள் வட்டத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், அரிசி மீது போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை படிப் படியாக மூட வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக பு.பரமேஸ்வரி, செயலாளராக பா.மகா லட்சுமி, பொருளாளராக பி.யு.சுனிதா உள்ளிட்டு 13 பேர் தேர்வு
குடியரசு தினவிழா சென்னையில் இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை,ஜன. 19- குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜன. 20, 22, 24 (ஒத்திகை நாட்கள்) மற்றும் 26ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நாட்களில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை காமராஜர் சாலை யில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனங்கள் செல்ல அனு மதிக்கப்படாது. அடையாறு பகுதியில் இருந்து காமரா ஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் பசுமை வழி சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம், திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிராட்வே சென்றடையலாம். அதே போல் அடையாறில் இருந்து வரும் பிற வாகனங்கள், காந்தி சாலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பி விடப்பட்டு ராயப்பேட்டை 1-பாயின்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஜெனரல் பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடைந்து பிரா ட்வேக்கு சென்றடையலாம். மயிலாப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயப்பேட்டை 1 பாயின் ட்டில் இடது அல்லது வலது புறமாகத் திரும்பி தங்களது இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடது புறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக பிராட்வே சென்றடையும். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காம ராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் ஹவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழி யாக திருப்பிவிடப்படும். பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடை யாறு நோக்கி செல்லும் அனைத்து வாக னங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் செல்லாமல், வடக்கு துறைமுகம் சாலை வழி யாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை, ஜி.பி.சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச்., அஜந்தா சந்திப்பு இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை, ஐஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடது அல்லது வலது புறம் திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்களது இலக்கை அடை யலாம். இவ்வாறு மாநாகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட்டை விற்ற கும்பல் கைது
திருப்பதி, ஜன. 19- திருப்பதியில் ரூ.300 போலி டிக்கெட்டுகளை போட்டோ ஷாப் மூலம் தயார் செய்து, டிக்கெட் கிடைக்காத பக்தர் களுக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300க்கு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடன் மறைமுகமாக கூட்டு சேர்ந்த 4பேர், பக்தர்கள் கொண்டு செல்லும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை, போலியாக போட்டோஷாப் மூலம் தயார் செய்துள்ளனர். மேலும் திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு, டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பக்தர்களை அடை யாளம் கண்டு அவர்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்துள் ளனர். அவ்வாறு கடந்த 14ஆம் தேதி பக்தர்கள் சிலரிடம் இவர்கள் கைவரிசை காட்டியபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பக்தர்களின் டிக்கெட்டுகளை வாங்கி தேவஸ்தான விஜி லென்ஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் களிடம் இருப்பது போலி டிக்கெட்டுகள் என்பதும், அந்த டிக்கெட்டுகளை மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிர காஷ் ஆகியோர் கொடுத்து அனுப்பியதும், அவ்வாறு வரு பவர்களின் டிக்கெட்டுகளை லட்சுமிபதி ஸ்கேன் செய்யா மல் அனுப்பியதும் தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்த கும்பலை, திரு மலை திருப்பதி தேவஸ்தான போலீசாரிடம் விஜிலென்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.