districts

img

திருச்சியில் பணி முடித்து வீடு திரும்பிய செவிலியர் சமூக விரோதியால் தாக்கப்பட்டார்

திருச்சியில் பணி முடித்து வீடு திரும்பிய செவிலியர் சமூக விரோதியால் தாக்கப்பட்டார். இந்நிலையில் செவிலியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த கோரி திங்களன்று (நவ.4) மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் தெ.வாசுகி, வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்கள் வி.தனலட்சுமி (மத்தியசென்னை), பாக்கியலட்சுமி (வடசென்னை), செவிலியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் து.அஸ்வினி கிரேஸ் உள்ளிட்டோர் பேசினர்.