districts

img

குப்பை கூடமாக மாறிய சமுதாயக் கூடம்

ஊரப்பாக்கம், டிச. 17- ஊரப்பாக்கம் ஊராட்சியில் முக்கிய சாலையின் அருகே சமு தாயக் கூடம் குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் 15 வார்டு கள் உள்ளன. இங்கு 75 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். சென்னை புறநகரையொட்டி மிக அருகில் அமைந்துள்ளதால் குடி யிருப்புகள், வணிக வளாகங்கள், அதிக அளவு பெருகிவிட்டது.  மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படாமல் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி, கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் குண்டும் குழியுமான, சேறும் சகதியுமான சாலைகளில் செல்ல வேண்டியுள்ளது. ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களில் குப்பைக் கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது. இந்த குப்பைக் கழிவுகளில் உள்ள காய்கறி கழிவுகளை மாடுகள், பன்றிகள் வந்து சாப்பிடுகின்றன. குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. ஊரப்பாக்கத்தில் இருந்து காரணைப்புதுச்சேரி செல்லும் சாலை யோரம் அமைந்துள்ள ஊரப்பாக்கம் மகளிர் சுய உதவிக்குழு சமுதாயக் கூட கட்டிடத்தை சுற்றி மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் சமுதாயக் கூடம் செயல்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர் மணிவேல் கூறுகையில், “சாலை யோரம் குப்பைகளை கொட்டுவதால் மாடு,நாய்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிக்கிறது. விபத்துக்களும் ஏற்படு கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரைக்கும் புகார் செய்து எந்த நடவடிக்கையும் இல்லை”என்றார். ந.நி