districts

வேலை வாய்ப்பு மைய பயிற்சியால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் 124பேர் தேர்ச்சி குரூப் 2 தேர்வுக்கு நவ20 விழுப்புரத்தில் பயிற்சி வகுப்பு

விழுப்புரம்,நவ.13- விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத்தேர்வில் 124 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வழி யாக ஒன்றிய, மாநில அரசுகளால் அவ்வப்போது அறி விக்கப்படும் பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லு நர்களைக்கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வலுவலகத்தால் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பு களில் பங்கு பெற்று 500ற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு உயர்ந்த அரசு பதவிகளில் பணிபுரிந்து வரு கின்றனர். பல்வேறு போட்டித்தேர்வுக ளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மிகப்பெரிய நூலகமும் இயங்கி வரு கிறது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ஆர்வ லர்கள் https://tamilnadu careerservices.tn.gov.in/ என்ற வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்தில் உறுப்பின ராக பதிவு செய்து கொண்டு பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளின் பாடக்குறிப்புகள், காணொளி பாடங்கள், பழையத்தேர்வு தாட்கள், மாதிரித்தேர்வுகள், புத்த கங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். முதன்மைத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு மாதிரி நேர்முகத்தேர்வும் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், தேர்வர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது தொடர்பில் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளவர்களை கொண்டு வழிகாட்டி நிகழ்ச்சி களும் நடத்தப்பட்டன. அதன் பலனாக நவ.8அன்று  தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை யத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினர்களில் 124 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் 20ஆம் தேதி அரசுப்பணி யாளர் தேர்வாணைய குரூப் 2  இன் முதன்மைத்தேர்விற்கு பயிற்சி வகுப்பு இவ்வலுவலக வளாகத்தில் துவங்கப்படவுள்ளது. இவ்வகுப்பில் இலவச முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர்  கேட்டுக்கொண்டுள்ளார்.