சென்னை, ஜூலை 1 சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 7 ஆண்டுகளில் 12கோடிப் பேர் பயணம் செய்துள்ள தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரி வித்துள்ளது. நகரில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன்29 ஆம்தேதி துவங்கியது. நாள்தோறும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. இது வரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஏழு ஆண்டு களில் அதாவது, 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 12கோடியே 28லட்சத்து 24ஆயிரத்து 577பயணிகள் பயணித்துள்ளார்கள். அதிகபட்சமாக கடந்த மாதம் 6 ஆம் தேதி 2,02,456 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 5,02,544 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2022, ஜூன் மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச் சீட்டு முறையைப் பயன் படுத்தி 13,18,641 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,65,340 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில்அட்டையை விற்க விருப்பமா?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்ப வர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடியை வழங்கி வரு கிறது. மெட்ரோ ரயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 2021 ஆம்தேதி முதல் 20சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம். என்று மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.