districts

img

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடுதலாக 100 படுக்கைகள்

கடலூர், மே 29- கடலூரில் தேவையின்றி வெளியில் சுற்று பவர்களுக்கு காவல் துறையினர் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 46 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழப்பும் 479ஆக பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தை அமல்ப டுத்தி உள்ளது. எனினும், பல்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டு ஏராளமானோர் இருசக்கர  வாகனங்களில் செல்வதை காண முடிகிறது. இதனை தடுக்கவும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் மாவட்ட காவல் துறை சார்பில் 50 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து காவல் துறையினர் கண்கா ணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில், தேவையின்றி வெளியே சுற்று பவர்களை திருப்பி அனுப்புதல், வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றனர். ஆனாலும் தேவையின்றி வெளி யில் சுற்றுவோரின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இதனால் உரிய காரணமின்றி வெளியில் வருவோரை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை புதிய உத்தியை கையாண்டு வருகிறது. கடலூர் பேருந்து நிலையம் அருகி லுள்ள ரவுண்டானாவில் துணை கண்கா ணிப்பாளர் க.சாந்தி தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர். அப்போது, உரிய காரணமின்றி வெளியே  வந்தவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தில், தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஒருசில வாகன ஓட்டி கள் அந்தப்பக்கம் செல்வதை தவிர்த்தனர். காவல் துறையினரின் இந்த நடவ டிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.