செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளவான 23.30 அடியை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு – பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் 6 ஆயிரம் கனஅடி நீர் முழுவதுமாக தற்போது மதகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் வீணாக பாலாற்றில் கலக்கப்பட்டு வங்க கடலில் கலந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கிளியாற்றில் தடுப்பணைகள் கட்டப்பட்டு தண்ணீரை வருங்காலங்களில் தேக்கிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.