districts

img

இருளர் இன மாணவிக்கு கல்வி நிதி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வழங்கியது

செங்கல்பட்டு, ஏப்.16 - நீட் தேர்வு எழுதி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள இருளர் இன மாணவிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கல்வி கட்டணத்திற்கான நிதியை வழங்கியது. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் பகுதியைச் சார்ந்தவர் பூஜா. இருளர் இன மாணவியான இவர் கடந்த மூன்று ஆண் டுகளாக தொடர்ந்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்தார். கடந்த இரண்டு  முறையும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான போதிய மதிப்பெண் கிடைக் காததால் மூன்றாவது முறை யாக நீட் தேர்வு எழுதினார். அதில், அரசு மருத்து வக்கல்லூரியில் சேர போதிய மதிப்பெண்கள் கிடைத்தது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத் தது. இந்நிலையில் கல்வி கட்டணம் செலுத்த தனது குடும்பத்தால் முடியாத நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உதவி யுடன் முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை செலுத்தி மருத்துவம் பயின்று வரு கிறார். இந்நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் முருகேசன், செயலாளர் எம். அழகேசன் ஆகியோர் கடந்த மூன்று மாதங்க ளுக்கு முன்னர் மாணவி பூஜா வின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கல்வி பயில சங்கம்  உதவிகள் செய்யும் என  வாக்குறுதி அளித்திருந்த னர். இதனைத் தொடர்ந்து பூஜாவின் கல்வி கட்டணத் திற்கான நிதி வழங்கும் விழா சனிக்கிழமையன்று (ஏப்.16) செங்கல்பட்டு சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கே.சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி யில் சங்கத்தின் ஸ்தாபகர் பி.சண்முகம், பொதுச் செய லாளர் இரா.சரவணன் ஆகி யோர் பூஜாவின் இரண்டாம் ஆண்டு கட்டணத்திற்கான ரூ. 1.30 லட்சத்தை வழங்கி னர். இந்நிகழ்ச்சியில் பி.சண்முகம் பேசுகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான மாணவ, மாணவிகள் உதவிகள் கிடைக்காமல் தான் விரும்பிய உயர் கல்வியை பெறமுடியாமல் உள்ளனர். இதுபோன்ற பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெற மலைவாழ் மக்கள் சங்கம் உதவி செய்யும் என்றார். தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி கல்வி பெற முடி யாத சூழ்நிலையில், மூன்றா வது முறை தேர்ச்சி பெற்று அரசுக் கல்லூரியில் சேர்ந் துள்ள பூஜா பாராட்டுக்கு ரியவர். இவருடைய மருத்துவ படிப்பு முடியும் வரையிலான அனைத்து உதவிகளை சங்கம் செய் யும். பூஜா போன்றோர் மருத்துவம் முடித்து மக்கள்  மருத்துவர்களாக செயல்பட வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தார். மாணவி பூஜா மருத்து வக் கல்லூரியில் சேர உதவி கள் செய்த மாவட்ட ஆட்சியர்  ராகுல்நாத் பாராட்டுக்குரிய வர் என்றும் அவர் குறிப் பிட்டார். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.அழகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ப.சு.பாரதி அண்ணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.மோகனன். விவ சாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட துணைச் செய லாளர் எம்.செல்வம் உள்ளிட் டோர் பேசினர்.