செங்கல்பட்டு, செப்.16- 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பகுதிக்கு பட்டா கேட்டு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒழுபாக்கம் கிராமம், அண்ணாநகர் பகுதியில் பட்டியலின மக்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். குடிமனைப் பட்டா இல்லாததால் அரசின் எந்த வித நலத்திட்டங்கள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு குடிமனை பட்டா கேட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்சின்னத்துரை சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர். ப.சு.பாரதி அண்ணா, விதொச மாவட்டச் செயலாளர் க.புருஷோத்தமன், சிபிஎம் மதுராந்தகம் வட்டச் செயலாளர்.எஸ்.ராஜா வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்.. ஜீவானந்தம், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர். ஜெயந்தி, விதொச- மாவட்ட பொருளாளர். சசிகுமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்.