tamilnadu

img

குமராட்சியில் குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், செப். 4- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் குமராட்சி  ஒன்றியம் மேல வன்னியூர் பெரிய வட்டம் பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்கக் கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செய லாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா  ஆகியோர் பேசினர். இறுதியில் வருவாய் ஆய்வாளர் வேலுமணியிடம்  மனு அளித்த னர்.  உயரதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச்  சென்று பட்டா வழங்குவதற்கு உரிய நட வடிக்கை எடுப்பதாக ஆய்வாளர் உறுதி யளித்தார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் கலைமணி, இளவரசன், செல்வகாந்தன், வேல்முருகன், பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.