அரியலூர், மார்ச் 1 - அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிரா மத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்கள் குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வரு கின்றனர். தெய்வசிகாமணியின் வீட்டிற்கு அருகில் மரப்பட்டறை நீண்ட வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மரப்பட்டறையில் இருந்து வரக்கூடிய மரத்துகள்கள், புகை மற்றும் அளவுக்கதிக மான சத்தம் ஆகியவற்றால் தெய்வசிகா மணி குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சமைக்கவும், சமைத்த உணவை உண்ணவும் முடியாத வகையில், இவர்கள் வீடு முழுவதும் மரத்துகள்கள் பரந்து காணப்படுவதாகவும் இதனை சுவாசிப்ப தால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெய்வசிகாமணி தெரிவிக் கிறார். இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மரப்பட்டறையை அப்புறப் படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலையில் சமைத்து உணவு உண்ணும் போராட்டத்தி லும் தெய்வசிகாமணி குடும்பத்தினர் ஈடுபட்ட னர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் தெய்வசிகாமணி குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை உடனடி யாக மீட்டு மண்ணெண்ணெய் பாட்டிலை பறி முதல் செய்தனர். மேலும் போலீசார் அவர்களி டம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெய்வ சிகாமணி பேசுகையில், “எங்களது வீட்டின் அருகில் உள்ள மரப்பட்டறையை உடனடி யாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மரப் பட்டறையில் இருந்து வீட்டுக்குள் வரக்கூடிய துகள்கள், தூசிகள் மற்றும் புகையினால் தினந்தோறும் செத்து கொண்டிருப்பதாகவும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் வருகிறோம். உடனடியாக மரப்பட்டறையை அப்புறப்ப டுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் வேதனையுடன்.