அரியலூர், செப்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக உயர் நீதிமன்ற வழக்கறிஞரை கொலை செய்த 6 பேர் திரு வையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவி லைச் சேர்ந்த சுப்பிரமணியன் இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன் களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் திருமணம் நடை பெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு அருகே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். அப்போது இருசக் கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும் பல் சாமிநாதனை அரிவாளால் வெட்டினர். இதில் சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் உயி ரிழந்த சாமிநாதன் உடலை மீட்டு ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து தீவிர விசா ரணை நடத்தி வந்தனர். முன் விரோதத்தில் இந்த கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில், கொலையில் தொடர்பு டைய தஞ்சை மாவட்டம் திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார் ஆகியோர் திருவையாறு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதை யடுத்து அவர்கள் 6 பேரும் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர்.