அரியலூர், செப்.11- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுந்தரேசபுரம கிராமத்தில் தனியார் உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமை யாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்பு றுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரி லும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் பெண்ணின் பெற்றோர் மாணவியை பள்ளிக்கு அனுப்பா மல் படிப்பை இடையில் நிறுத்திவிட்டனர். . ஆனாலும் தொடர்ந்து மாணவியிடம் ஆசிரியர் தினேஷ் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதால் மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தினேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத் தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.