districts

img

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதியின்றி இயங்கும் தனியார் உணவு விடுதி

விருதுநகர், ஜூலை 3- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு பகுதி களில் உரிய அனுமதியின்றி ஆபத்தான நிலையில் தனியார் உணவு விடுதி இயங்கி  வருவதை உடனடியாக அகற்ற வேண்டு மென முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விருதுநகர், இராமமூர்த்தி சாலையின் இருபுறமும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள் தோறும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த  நிலையில் பிரசவ வார்டு பகுதி, அரசு மருத்  துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில்  தனியார் உணவு விடுதி அமைக்கப்பட்டது.  பிரசவ வார்டு பகுதியில் தனியார் உணவு விடுதி நடத்த இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் உணவு விடுதி யை அகற்ற வேண்டும் என சாலையோரக் கடை வியாபாரிகள் முதலமைச்சர், மாவட்ட  ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர்.  மனுவில், “பிரசவ வார்டின் நுழைவு பகு தியில் தனியார் உணவு விடுதி அமைக்கப்  பட்டுள்ளது. இதனால் அவசரச் சிகிச்சைக்கு  வந்து செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமப்பட வாய்ப்புள்ளது. எரிவாயுவை பயன்படுத்துவதால் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெய் கலந்த மாசு காற்றில் பரவி பச்சிளம் குழந்தைகளுக்குச் சுவாசக் கோளாறு ஏற்படும். தனியார் உணவு விடுதியால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  தங்களது வியாபாரம் பாதிக்கும் என்பதால், தனியார் உணவு விடுதியினர், அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினரால் வழங்கப்பட்டு வந்த அன்னதானத்தைத் தடுத்து நிறுத்தி விட்டனர். இந்த உணவு விடுதியால் அம்மா உணவகம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை நம்பி பல வரு டங்களாக இருபதுக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது வியாபாரம் செய்யக் கூடாது எனக் கூறி அகற்ற முயல்கின்றனர். விதிமுறைகளைப் பின்பற்றாமல் உணவு விடுதி வைக்க உரி மம் கொடுத்த அதிகாரிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்  துள்ளனர்.