விருதுநகர். ஜூலை 2- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவி யூர் கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். காரியாபட்டி அருகே உள்ளது ஆவியூர் கிராமம், இங்கு சாதி ஆதிக்க சக்திகள் பெரும் பகுதியாகவும். தலித் மக்கள் சுமார் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இந்நிலை யில். தலித் மக்கள் பகுதியில் உள்ள கோவில் திருவிழா வையொட்டி முளைப்பாரி ஊர்வலம் சென்று பொது கண்மாயில் கரைக்கக் கூடாது என சாதி ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்தநிலையில், சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக் கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கல்வீசித் தாக்கு தல் நடத்தினர். இதையடுத்து. விருதுநகர் மாவட்ட காவல் துறை இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட பலர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்துள் ளது. மேலும் ஆவியூரில் 600க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இந்தநிலையில். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆவியூரில் தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர், அதில், டீக்கடைகளில் இரட்டை டம்ளர்முறை இருப்பதும், தலித் மக்கள் ஹோட்டலில் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதும், சாதி ஆதிக்க சக்திகள் முடி வெட்டும் கடையில் தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது, தெருவில் செருப்பு அணிந்து நடந்து செல்லத் தடை, முளைப்பாரி எடுத்து பொது தெருவில் கொண்டு செல்ல தடை உள்ளிட்ட இது போன்ற தீண் டாமை கடைபிடிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இந்த ஆய்வில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செய லாளர் பி.சுகந்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.முத் துக்குமார், எம்.ஊர்காவ லன், எஸ்.லட்சுமி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் என்.உமா மகேஸ்வரி, மாவட் டத் தலைவர் எஸ்.தெய் வானை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் எம்,ஜெயபாரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஏ.அம்மாசி ஆகியோர் கலந்து கொண்டனர்.