districts

img

ஜிஎஸ்டி வரி உயர்வு-பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பண்டிகை காலத்தில் கூட முடங்கிப்போன கைத்தறி - சிறு தொழில்கள்

சீராக மண்ணெண்ணெய் விநியோகித்தால்  ஸ்டவ் அடுப்பு தயாரிப்பு  அதிகரிக்கும்

செல்லூர் மீனாட்சிபுரம் சாலை யில் இங்கி வரும் ப்ளூ பிரேம்  ஸ்டவ் கம்பெனி உரிமையாளர் பிச்சை என்பவர் கூறுகையில், நான் 1985 ஆம்  ஆண்டு இந்த தொழிலுக்கு வந்தேன். தொழிலை ஐந்தாண்டுகளில் கற்றுக் கொண்டு 1990 ஆம் ஆண்டு தனியாக இத்தொழிலை துவங்கினேன். 40 பேர்  என்னுடைய பட்டரையில் வேலை செய்து  வந்தார்கள். இன்று 10 பேர் தான் வேலை  செய்கிறார்கள். இந்தியாவில்தான் உலக பணக்காரர் முதல் அடித்தட்டு மக்  கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். கேஸ் விலை உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் மண்ணெண்ணெய்யை பயன் படுத்தி வருகிறார்கள். ஆனால் இன் றைக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்  கப்படும் மண்ணெண்ணெய் பெரு மளவில் குறைக்கப்பட்டதால் எங்களு டைய ஸ்டவ் அடுப்பு தயாரிப்பும் குறைந்துவிட்டது. பீகார் போன்ற மாநி லங்களில் இன்றைக்கும் ஸ்டவ் அடுப்பு கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள  மாநிலங்களில் பயன்பாடு குறைந்து விட்டது. தொடர்ந்து உற்பத்திக்கான பொருட்களின் ஜிஎஸ்டி 18 சதவீதம் உயர்ந்துள்ளது. நாங்கள் தயாரித்து கொடுக்கும் பொருளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது இந்த ஜிஎஸ்டி வரி பொதுமக்கள் தலையில்தான் விழு கின்றது இதனாலும் தயாரிப்பு குறைந்து விட்டது, அரசு பேரிடர் காலத்தில் மட்டுமே ஸ்டவ் அடுப்புகளை கொடுப்பதற்காக எங்களை நாடி வருகிறார்கள். அதற்கு பின் ஸ்டவ் அடுப்பின் பயன்பாடுகளை யாரும் எதிர்பார்ப்பதில்லை. எனவே அரசு மண்ணெண்ணெய்யை சீராக விநி யோகம் செய்தால் அடித்தட்டு மக்கள்  ஸ்டவ் அடுப்புகள் மூலம் பயன்பெறு வார்கள். எங்களுக்கும் வேலை வாய்ப்பு கள் பெருகும் என்று கூறினார்.

மதுரை, அக்.17-  ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக அமல்  படுத்திய ஜிஎஸ்டி வரி உயர்வு மற்றும் வர லாறு காணாத பெட்ரோல்,டீசல் விலை உயர்  வால் சிறுதொழில்கள் முடங்கிப்போயுள் ளன. பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் சிறு தொழில்கள் பண்டிகை காலங்களில் கூட கடு மையான சரிவையும் வீழ்ச்சியையும் சந்தித்து வருகிறது. மதுரை செல்லூர் பகுதியில் கைத்தறி, சில்வர் பாத்திரங்கள் தயாரிப்பது, அலு மினிய பட்டறை, ஸ்டவ் தயாரிப்பு தொழில் என்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்களும் கைத்தறி தொழிலை மட்டுமே நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் உள்ள னர். இதில் 75 சதவீதம் பெண்களும் 25 சத வீதம் ஆண்களும் உள்ளனர். கைத்தறி தொழிலில் கடந்த 10 நாட்க ளாக விடுமுறை விடப்பட்டுள்ளது . இதனால்  தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தி னரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் தொழிலை பாதித்த ஐரோப்பிய தடை

சன் என்ற தொழிலாளி கூறுகையில், எங்க ளுடைய கைத்தறி துண்டுகள் தயாரிப்பு கூடங்  கள் கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டு. தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்படுள்  ளது. குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இங்கு தயாரிக்கப்படும் துண்டுகள் ஏற்றுமதி யாகும். தற்போது விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி போன்றவைகளால் ஏற்றுமதி குறைந்துள்ளது. அதனால் உற்பத்தியும் மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது. மதுரை யில் இயங்கி வந்த கைத்தறி நிறுவனங்கள் கூட கரூரில் மிஷின்களில் தயாரிக்கப்படும் துண்டுகளை வாங்கி விற்பனை செய்யும் அளவிற்கு கைத்தறி தயாரிப்புகள் குறைந்து விட்டதன. இரவு - பகல் ஓடிக்கொண்டிருந்த கைத்தறிகள் கால் மிதி மேட்டுகள் தயாரித்து  வருகிறது. எங்களுக்கு இந்த நிலை என்றால் பல ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் மதுரை கோட்ஸ் தொழிற்சாலை தமிழகத்தில் மதுரை,  தூத்துக்குடி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதி களில் இயங்கி வருகிறது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நூற்பு ஆலைகளை  இயக்கி வருகிறது கடந்த வாரம் 10 நாட்கள்  தொடர்ந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து எங்கள் பகுதியில் பணியாற்றும் நபரிடம் கேட்டபோது ரஷ்யா - உக்ரைன் போர்  காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த பொருளாதார தடையால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் அரபு  நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வதால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் - டீசல் மற்றும் உணவுக்கு அதிக  அளவில் செலவு செய்வதால் ஆடைகளுக் கான செலவினம் குறைந்துள்ளது. நூல்கள் ஏற்றுமதி மிகப்பெரும் அளவில் குறைந்துள் ளது. உற்பத்தியில் பெரும் பாதிப்பு என்றா லும் ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்  பட்டுள்ளது. ஆனால் 10 நாட்களுக்கு உற்  பத்தியை நிறுத்திக் கொள்வோம் என்று மதுரை கோட்ஸ் நிர்வாக தரப்பில் கூறப் பட்டுள்ளது.

 ரஷ்யா - உக்கரை போர் ஒரு காரணம் என்றாலும் ஏற்றுமதிக்கான விலை ஏற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நிர்வாகம் இது போன்ற முடிவை எடுக்க வேண்டியது சூழ்நிலை உள்ளது. எனவே  தற்போது உற்பத்தி செய்துள்ள பொருட் களை சந்தைக்கு கொண்டு சென்ற பின் ஏற்கனவே இருக்கும் ஆர்டர்களை நாம் செய்து கொடுப்போம். இந்த நிலை மார்ச்  மாதம் வரை நீடிக்கும் என்று நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர். சர்வதேச அளவில் செயல் படும் ஒரு நிறுவனத்திற்கு இந்த நிலை என்றால். செல்லூர் பகுதியில் இயங்கும் சிறுதொழில்கள் அதில் சிறு தூசி தான்.  தொடர்ந்து நூல் விலை உயர்வு மற்றும்  ஜிஎஸ்டி வரி உயர்வு போன்ற பிரச்சனை களால் இங்கிருக்கும் தறிகளின் சிறு முத லாளிகள் கடுமையான நெருக்கடியில் உள்ள னர். இங்கிருந்து ஏற்றுமதி செய்து சரக்கை  இறக்கும் வரை வரி மற்றும் சுங்கம் சாவடி  கட்டணம் என்று தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு கடு மையான பொருளாதார நெருக்கடி ஏற்படு கிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக அள வில் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தீபா வளி பண்டிகை இன்னும் 10 தினங்களே உள்ள நிலையில் வேலை இன்றி இருப்பது  பெரும் சிரமமாக உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் அப்போதுதான் சிறுமுதலாளிகளும் தொழி லாளர்களும் வாழ முடியும் என்று கூறி னார்.

மண்ணெண்ணெய் விற்பனை குறைவால் ஸ்டவ் உற்பத்தி நிறுவனங்கள் பாதிப்பு

மதுரை செல்லூர் பகுதியில் மற்றொரு பிரதான தொழில் ஸ்டாவ் அடுப்பு தயா ரிப்பு. கடந்த சில வருடங்களாக மண்ணெண்  ணெய் விற்பனை மற்றும் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வினியோகம் குறைந்த தால் ஸ்டவ் தயாரிப்பு குறைந்துவிட்டது. மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக  உயர்ந்துள்ளதும் மற்றொரு காரணமாகும்.  கேரளா, ஆந்திரா உள்பட வட மாநிலங்க ளுக்கு இங்கிருந்து தயாரிக்கப்படும் ஸ்டவ்  கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் தற்போது தீபாவளி நேரத்தில் கூட வாரத்தில் இரண்டு நாள் வேலை இருப்பதே அரிதாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஸ்டவ் தயாரிக்கும் பட்டறைகள் இருந்தன. 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 10 பேர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய தொழிலாளர்கள் தற்போது தீபாவளி நேரம் என்பதால் ஜவுளிக்கடைகளுக்கு வேலைக்கு  சென்று விட்டார்கள் என்று ஸ்டவ் அடுப்பு தயாரிக்கும் தொழிலாளி நம்பிராஜன் வேத னையுடன் கூறினார்.

சில்வர் பட்டறையில் பணியாற்றும் காளி முத்து என்ற தொழிலாளி கூறுகையில், 28 வருடங்களாக நான் சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறேன். சில்வர் பாத்தி ரத்தில் இருந்து சமையல் குக்கர் வரை தயா ரிப்பதற்கான தொழில் நுட்பங்கள் எனக்கு தெரியும். மதுரையில் தயாரிக்கப்படும் சில்  வர் பாத்திரங்கள் தில்லி உள்பட இந்தியா வில் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஊதி யம் பெற்று வந்தேன். கொரோனா நோய்  தொற்றுக்கு பின் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது அதேபோல் மூலப் பொருட்களுக் கான விலையும் அதிகரித்துவிட்டது. தற் போது வாரத்தில் இரண்டு நாள் மூன்று நாட்கள்தான் வேலை இருக்கின்றது, இதுபோன்ற முறைசாரா தொழிலாளர்கள் அரசுக்கு பல்வேறு வகைகளில் வரு வாய் ஈட்டித்தரும் தருவாயில் எங்களுக்காக  தனியாக நல வாரியம் அமைத்து, பண்டிகை  காலங்களில் அரசு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்தால் மிகப்பெரும் பயனாக இருக்கும். மூலப்பொருட்களுக்கான விலை, ஜிஎஸ்டி வரிகளை குறைத்தால் பொருட்களின் தயாரிப்பு அதிகரிக்கும். தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் குறைந்து வருகிறது. அனைத்து வகையிலும் விலை உயர்வை கட்டுப்படுத்தினால்தான் முறைசாரா தொழி லாளர்கள் வாழ்க்கை மேம்படும் என்று கூறி னார்.

செய்தி, படங்கள்: ஜெ.பொன்மாறன்