districts

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை. செப்.14- மின்சார சட்ட மசோதா 2022ஐ திரும்பப்பெற வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்கி நிலுவைத் தொகை யுடன் வழங்க வேண்டும்.  56 ஆயிரம் காலிப்பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மதுரை கிளை, மதுரை பெருநகர், ஜிஜிசி மதுரை கிளைகள் சார்பில் செவ்வாயன்று மதுரை தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மதுரை கிளை தலைவர் எஸ்.திருமுருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.தெய்வ ராஜ், சிஐடியு மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், பொறியா ளர் சங்கம் மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜீவா னந்தம், மதுரை கிளை திட்டச் செயலாளர் சி.செல்வராஜ், மதுரை பெருநகர் திட்டச் செயலாளர் டி.அறிவழகன்,  ஆகியோர் பேசினர்.